தமிழ்நாடு

இன்று எந்தெந்த மாவட்டங்களில் அதிகனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Published

on

சென்னை உள்பட ஒருசில மாவட்டங்களில் நேற்று திடீரென மழை கொட்டிய நிலையில் இன்றும் நாளையும் தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் உள்பட யாருமே எதிர்பாராத வகையில் நேற்று திடீரென சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களில் பெய்த மழை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றும் நாளையும் தமிழக கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுமட்டுமின்றி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்பும் ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று இடி மின்னலுடன் கூடிய அதி கனமழைக்கு வாய்ப்பு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் மீண்டும் மிகப்பெரிய மழை காத்திருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் சென்னையில் நேற்று பெய்த கனமழை காரணமாக சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என காவல்துறை அறிவித்துள்ளது. மெரினா கடற்கரையில் பெரும்பாலான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version