இந்தியா

வெப்பம் அதிகரிக்கும், வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Published

on

டெல்லியில் இன்னும் ஒரு சில நாட்களுக்கு வெப்பம் மிக அதிகமாக இருக்கும் என்றும் எனவே அத்தியாவசிய தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது .

கோடைகாலம் தற்போது தொடங்கி விட்டதை அடுத்து தமிழகம் உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக டெல்லியில் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக பொது மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டெல்லியில் வெப்பநிலை வரும் 28ஆம் தேதிக்குள் 44 முதல் 46 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக டெல்லியில் கன்னாட் பிளேஸ் என்ற பகுதியில் கடும் வெயில் காரணமாக பாதசாரிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

ஏப்ரல் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கடுமையான வெப்பம் இருக்கும் என்றும் இந்த இரண்டு நாட்களில் அவசியம் இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றும் இல்லாவிட்டால் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு டெல்லி அரசு அறிவுறுத்தியுல்ளது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் ஏப்ரல் 28-ஆம் தேதிக்கு பிறகு வெயில் அளவு படிப்படியாக குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version