இந்தியா

முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை: வானிலை அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி!

Published

on

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே ஆரம்பிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது .

தென்மேற்கு பருவமழை என்பது இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை 4 மாதங்களில் பெய்யும் பருவமழை ஆகும். இந்த பருவ காலத்தில் தமிழகம் புதுவை உள்பட தென் மாநிலங்களில் நல்ல மழை பெய்யும் என்பதும் நீர்நிலைகள் நிரம்பும் என்பதும் குறிப்பிடத்தக்கது .

பொதுவாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் இந்த பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கும் என்று கூறப்படுகிறது. அதாவது மே 15ஆம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

rainமே 4ஆம் தேதி தொடங்கி அக்னி நட்சத்திரம் மே இருபத்தி எட்டாம் தேதி வரை இருக்கும் என்பதால் மிகப்பெரிய அனல் காற்று வீசும் என்றும் அதிக அளவில் வெப்பம் இருக்கும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்தின் கோரப்பிடியில் இருந்து பொதுமக்கள் தப்பித்து விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version