வேலைவாய்ப்பு
இந்திய மருத்துவ அறிவியல் மையம்(எய்ம்ஸ்) செவிலியருக்கான அதிகாரி வேலை!
இந்திய மருத்துவ அறிவியல் மையம்(எய்ம்ஸ்) இந்தியா முழுவதும் கிளைகள் அமைத்துச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. தற்போது சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் எய்ம்ஸ் கிளையில் காலியிடங்கள் 200 உள்ளது. இதில் செவிலியர் அதிகாரி வேலைகளுக்கான அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
மொத்த காலியிடங்கள்: 200
வேலை: Nursing Officer (Staff Nurse Grade-II)
வயது: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: செவிலியர் பிரிவில் பி.எஸ்சி. நர்சிங், பி.எஸ்சி. (ஹான்ஸ்) நர்சிங், ஜெனரல் நர்சிங் மிட்வை பிரிவில் டிப்ளமோ முடித்து, தங்கள் பெயரை நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். டிப்ளமோ முடித்தவர்கள் 2 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.44,900-1,42,400.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.aiimsraipur.edu.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
கட்டணம்: பொது, ஓபிசி, முன்னாள் ராணுவ பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.1000-ம், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.800 கட்டணமாகச் செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
மேலும்முழுவிவரங்கள்அறிந்துகொள்ளhttp://www.aiimsraipur.edu.in/upload/vacancies/5d15b04a1024f__Final%20Staff%20Nurse%20advt%20approved%2028.06.2019.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.07.2019