இந்தியா

கூகுளில் குறைபாடு கண்டுபிடித்த இந்திய இளைஞர்: அதன்பின் நடந்தது என்ன தெரியுமா?

Published

on

கூகுளில் மிகப்பெரிய குறைபாடை கண்டுபிடித்த இந்திய இளைஞருக்கு விருது வழங்கி கவுரவித்தது மட்டுமின்றி முக்கிய பதவியையும் கூகுள் நிர்வாகம் அளித்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

உலகின் முன்னணி தேடு தளங்களில் ஒன்றான கூகுளை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கூகுளில் உள்ள மிகப்பெரிய குறைபாடு ஒன்றை இந்தியாவை சேர்ந்த ரித்துராஜ் சவுத்திரி என்ற இளைஞர் கண்டுபிடித்துள்ளார்.

19 வயதே ஆன இவர் மணிப்பூரில் உள்ள ஐஐடியில் படித்து வருகிறார் என்பதும் இவர் கூகுளில் உள்ள முக்கிய குறையை கண்டுபிடித்து இந்த குறைபாடுகளால் மிகவும் எளிதில் ஹேக்கர்கள் நுழைய முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

அந்த குறைபாட்டை ஆய்வு செய்த கூகுள் இது முக்கிய குறைபாடு தான் என்பதை ஒப்புக் கொண்டு அவருக்கு சிறப்பு விருது வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி கூகுளின் குறைபாடுகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளர் பட்டியலில் அவருடைய அவரையும் இணைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கூகுளில் மேலும் சில குறைகள் இருக்கிறதா என்பதை ரித்துராஜ் சவுத்திரி ஆய்வு செய்வார் என்பது குறிபிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version