பிற விளையாட்டுகள்

ஒலிம்பிக் ஹாக்கியில் இதுவரை இந்தியா பெற்ற பதக்கங்கள்!

Published

on

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி இன்று ஜெர்மனி அணியை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்று உள்ளதை அடுத்து நாடே இந்திய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பிரதமர் மோடி, முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்களது டுவிட்டர் பக்கங்களில் இந்திய அணிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்

இந்த நிலையில் இந்திய ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் தற்போதுதான் பதக்கம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு காலத்தில் இந்திய ஹாக்கி அணி தொடர்ச்சியாக ஆறுமுறை தங்கம் பெற்றது என்பதும் அதன் பின்னரும் வெள்ளி மற்றும் தங்கம் வெண்கலம் என மாறிமாறி பெற்றுக் கொண்டு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

ஆனால் 1980 ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தங்கம் வென்றது அடுத்து தற்போது தான் பதக்கம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்திய ஹாக்கி அணி இதுவரை ஒலிம்பிக் போட்டியில் பெற்ற பதக்கங்கள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.

* 1928ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம்

* 1932ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம்

* 1936ஆம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம்

* 1948ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம்

* 1952ஆம் ஆண்டு ஹெல்சின்கி ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம்

* 1956ஆம் ஆண்டு மெல்போர்ன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம்

* 1960ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம்

* 1968ஆம் ஆண்டு மெக்சிகோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம்

* 1972ஆம் ஆண்டு முனிச் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம்

* 1980ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம்

* 2020ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம்

author avatar
seithichurul

Trending

Exit mobile version