தமிழ்நாடு

இந்தியாவின் வரலாறு தமிழகத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

Published

on

இந்திய துணை கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பிலிருந்து தான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் என்று தெரிவித்துள்ளார்.

கீழடி மூலம் சங்ககால தமிழர்களின் வாழ்க்கை முறையை உலகமே அறிந்துள்ளது என்றும், கீழடியில் கிமு 3 ஆம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்த வெள்ளிக்காசு கண்டு கண்டறியப்பட்டுள்ளதாகவும், அகழாய்வு நடைபெறும் ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், கொற்கை துறைமுகம் கிமு ஆறாம் நூற்றாண்டுக்கு முந்தையது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் நெல்லை நகரில் ரூபாய் 15 கோடியில் நவீன வசதிகளுடன் ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும், அகழாய்வு பணிகளுக்கு ரூபாய் 5 கோடி ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் பாயும் தாமிரபரணி ஆறு தமிழ் இலக்கியங்களில் பொருநை ஆறு என குறிப்பிடப்படுகிறது என்றும், பொருநை ஆற்றங்கரை நாகரிகம் 3700 ஆண்டுகள் பழமையானது என அமெரிக்க ஆய்வு நிறுவனத்தின் நோக்கம் முடிவுகள் தெரிவிக்கின்றன என்றும் அதன் காரணமாகவே நெல்லையில் அமையவிருக்கும் அருங்காட்சியகத்திற்கு பொருநை என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய துணை கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்றும் கேரள மாநிலம் பத்தனம், ஆந்திராவின் வேங்கி, கர்நாடகாவின் தலைக்காடு, ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வரலாற்றை தமிழகத்தில் இருந்து தொடங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் இந்த கருத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version