Connect with us

இந்தியா

PM Cares இந்திய அரசுக்குச் சொந்தமானது இல்லை என்றால் நிர்வாகிக்கும் தனியார் நிறுவனம் யார்?

Published

on

PM Cares இந்திய அரசுக்குச் சொந்தமானது இல்லை என்றால் அதனை நிர்வாகிக்கும் தனியார் நிறுவனம் யார் என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.

முரசொலி வெளியிட்டுள்ள தலையங்கத்தில், “ஒன்றிய பா.ஜ.க. அரசு எப்படிச் செயல் படுகிறது என்பதற்கு ஒரே ஒரு உதாரணம்;‘பி.எம்.கேர்ஸ்’ நிதி விவகாரம்! பட்டப்பகலில் அரசாங்கத்தை வைத்து மொத்த நாட்டு மக்கள் தலையிலும் மிளகாய் அரைக்க முடியும் என்பதைப் பட்டவர்த்தனமாகக்காட்டி விட்டார்கள்.

பி.எம்.கேர்ஸ் நிதி என்பது தொடங்கப்பட்டதை மேலோட்டமாகப் பார்த்தாலே இது இந்தியப் பிரதம அமைச்சர் நிவாரண நிதி என்பது தெரியும். ஒன்றிய அரசாங்கத்தின் முத்திரை அதிலிருந்தது. அந்த முத்திரையைத் தனியார் யாரும் பயன்படுத்தமுடியாது. அரசாங்கம் மட்டும் தான் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்த முடியும்.பிரதமர் மோடியும் முழுமையாக வணங்கி நின்றார். தனியார் நிறுவனத்துக்கு ஒருநாட்டின் பிரதமர் விளம்பர அம்பாசிட்டராக இருக்க முடியாது. இருக்கவும் மாட்டார்(!) என்றும் நம்புவோம். அந்த அறக்கட்டளையில் யார் யார் இருந்தார்கள் தெரியுமா?

இதன் தலைவராக பிரதமர் இருப்பார் என்று ஒன்றிய அரசே அறிவித்தது!இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இருந்தார்!இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா இருந்தார்!இந்தியாவின் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இருந்தார்!

இவர்கள் மூவரும் பிரதமருக்கு அடுத்ததாக ஒன்றிய அமைச்சரவையில் இருக்கும் மூன்று பேர். ஆக்கவும் அழிக்கவும் அதிகாரம் படைத்தவர்கள்.
பிரதமர் அலுவலகத்தின் துணைச் செயலாளராக இருந்த பிரதீப்குமார் ஸ்ரீவாஸ்தவா இதன் நிர்வாகப் பொறுப்பைக் கவனித்து வருகிறார்.

-இதற்கு மேலும் இது அரசாங்க அமைப்பு இல்லை என்றோ, பிரதமருக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றோ யாரும் சொல்ல முடியாது. ஆனால் அப்படித்தான் சொல்கிறது ஒன்றிய அரசு. இதனை நம்மையும் நம்பச் சொல்கிறார்கள்.

“பி.எம். கேர்ஸ் நிதியம், ஒன்றிய அரசுக்குச் சொந்தமானது இல்லை. அந்தநிதியம் நன்கொடையாக வசூலித்த தொகை ஒன்றிய அரசின் நிதியத்துக்குச்செல்லவில்லை” என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இப்படிச் சொல்லி இருப்பவர் யார் தெரியுமா? இந்த நிதியத்தின் நிர்வாகப் பொறுப்பைக் கவனித்து வரும் பிரதமர் அலுவலகத்தின் துணைச் செயலாளர் பிரதீப்குமார் ஸ்ரீவாஸ்தவாதான் இப்படிச் சொல்லி இருக்கிறார். “இந்த நிதியத்துக்கு மதிப்பூதிய அடிப்படையில் நான் பணியாற்றி வருகிறேன். நான் ஒன்றிய அரசின் அதிகாரியாக இருந்தாலும் பி.எம்.கேர்ஸ் நிதியத்தில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டிருக்கிறேன்” என்றும் அவர் சொல்லி இருக்கிறார். இவரைப் பணியாற்ற அனுமதித்தது யார்? பிரதமர் அலுவலக அதிகாரியை இப்படி எல்லா இடத்திலும் பணியாற்ற அனுமதித்து விடுவாரா பி.எம்.?

கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களைக்காப்பாற்றுவதற்கு ஒன்றிய அரசு என்ன செய்தது என்ற கேள்வி பூதமாக எழுந்தது. அப்போது இவர்கள், ‘எங்களிடம் பணமில்லை’ என்றார்கள்.வங்கிகளில் கடன் வாங்கித் தருகிறோம் என்றார்கள். இந்தக் கேள்வி அதிகமாக எழுந்ததும், ஏதோ மக்களுக்குப் பணம் கொடுக்கப்போவதைப் போல வசூல் செய்தது ஒன்றிய அரசு. அப்போது அறிவிக்கப்பட்டது தான் பி.எம். கேர்ஸ் ட்ரஸ்ட்ஆகும். ‘பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரக் கால சூழ்நிலை நிதியம்’என்று இதற்குப் பெயர். இதற்கு நன்கொடைகள் வழங்குமாறு பிரதமரே 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கேட்டுக் கொண்டார்.

ரூ.2.25 லட்சத்தில் இந்த நிதியம் தொடங்கப்பட்டதாகவும் – மார்ச் 27 முதல் 31வரை மட்டும் ஐந்தே நாளில் 3,076 கோடி ரூபாய் சேர்ந்து விட்டதாகவும் ஒன்றிய அரசு அறிவித்தது. (2020)

பி.எம்.கேர்ஸ் நிதி மூலமாகக் கிடைத்த பணத்தில் மாநிலங்களுக்கு 3 மடங்கு வெண்டி லேட்டர்கள் வழங்கப்பட்டதாக ஒன்றிய அரசு கடந்த மே 18 ஆம் தேதி அறிவிப்பு ஒன்றைச் செய்துள்ளது. இந்த நிதியை வைத்து ஆக்சிஜன் உற்பத்தியைத்தொடங்கப் போவதாகவும் சொன்னார்கள். இப்படி எத்தனையோ அறிவிப்புகளைச்செய்தார்கள். இப்போது செய்துள்ள அறிவிப்புதான் அதிர்ச்சியாக இருக்கிறது,‘பி.எம்.கேர்ஸ் நிதியம் ஒன்றிய அரசுக்குச் சொந்தமானது அல்ல’! என்பதாகும்!

“பி.எம்.கேர்ஸ் நிதியத்தை இந்திய அரசுக்குச் சொந்தமானதாக அறிவிக்கவேண்டும்’ என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் சம்யக் கங்வால் என்பவர் வழக்கு தாக்கல் செய்கிறார். அதற்கு பிரதமர் அலுவலகத்திலும், இந்த பி.எம்.கேர்ஸ்நிதியத்திலும் பணியாற்றும் ஒரு அதிகாரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்கிறார். ‘பி.எம். கேர்ஸ் நிதியம் ஒன்றிய அரசுக்குச் சொந்தமானது அல்ல’என்று சொல்லிவிட்டு இவர் சும்மா இருந்திருக்க வேண்டும். ஆனால் என்றசெய்கிறார் என்றால், பி.எம்.கேர்ஸ் நிதியம் யோக்கியமாகத்தான் செயல்படுகிறது என்று அந்த அதிகாரி முட்டுக் கொடுத்து பக்கம் பக்கமாக பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்கிறார்.

இது வெளிப்படையாக இயங்குகிறது, வரவு செலவு கணக்கு ஆடிட் செய்யப்பட்டுவிட்டது, வெளிப்படையாகத்தான் நிதி பெறுகிறது, இவை வெளிப்படையாக அறிவிக்கப்படுகிறது – என்று இவர் பி.எம்.கேர்ஸ் நிதியமாகவே மாறி விளக்கம் அளிக்கிறார்.‘இது ஒன்றிய அரசுக்குச் சொந்தமானதும் அல்ல, அரசின் உதவியுடன் செயல்படும் தனி அமைப்பும் அல்ல, அதனால் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் வராது’ என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.

அரசுக்குச் சொந்தமானதும் அல்ல, அரசின் உதவியுடன் செயல்படும் தனியமைப்பும் அல்ல என்றால் அது தனியாருக்குச் சொந்தமானது ஆகும். அந்தத்தனியார் யார் என்பதுதான் கேள்வி. அந்த தனியார், ஒன்றிய அரசின் முத்திரையை பயன்படுத்த முடியுமா? என்பது அடுத்த கேள்வி. பிரதமரே இப்படி ஒரு அறக்கட்டளையைத் தனது பெயரில் உருவாக்கி பணம் திரட்ட முடியுமா? என்பதே வெளிப்படையான கேள்வி.

பிரதமர் நிவாரண நிதி என்று காலம் காலமாக இருக்கிறது. அதைத் தாண்டி இன்னொரு நிதியம் எதற்காகத் தொடங்கப் பட்டது? கொரோனா தடுப்புக்காகத்தனி நிதியம் வேண்டும் என்று நினைத்திருந்தால், அதனை அதன் பெயரில் தொடங்கி இருக்க வேண்டும். அப்படியே இன்னொரு நிதியம் தொடங்கினாலும்,அதனை அரசுக்குள் தொடங்கி இருக்கலாம். அரசு போல, ஆனால் அரசு அற்றதாகத்தொடங்கியது ஏன்?

யார் பணம் கொடுக்கிறார்கள்? எதற்காகக் கொடுக்கிறார்கள்? யார் இதனைப் பயன்படுத்துகிறார்கள்? இவர்களது நாற்காலிகள் காலியானால் யார்இந்த நிதியைக் கையாள்வது? அல்லது யாருக்குப் போகும்? இப்படிக் கேட்டுக்கொண்டே போகலாம்!

இப்படி வசூலான பணம் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதையாவது அறிவிக்க வேண்டாமா? நேற்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு வந்தது.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தரவேண்டும் என்ற வழக்கு அது. ஒன்றிய அரசின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 ஆயிரம் தரவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

50 ஆயிரத்தை ஒன்றிய அரசு தரப்போவதாக நினைத்துவிடாதீர்கள்? ‘நாங்கள் கொடுத்துள்ள வழிகாட்டுதல் படி மாநில அரசுகள் வழங்கும்’ என்பதுதான் அவர்களது இலட்சணம்.50 ஆயிரத்தை மாநில அரசு கொடுக்கும் என்று சொல்வதற்கு எதற்காக ஒரு ஒன்றிய அரசு? இந்த 50 ஆயிரத்தைக் கொடுக்கக் கூட முடியாமல் எதற்காக பி.எம்.கேர்ஸ் வைத்துள்ளீர்கள்? விளைவு கள் ஏற்படுத்தும் சந்தேகங்கள்தான் அதிகமாகி வருகிறது! பா.ஜ.க. அரசு, எத்தகைய அரசு என்பதற்கு உதாரணம் இது ஒன்றே போதும்!” என முரசொலி தலையங்க சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.

author avatar
seithichurul
வணிகம்22 மணி நேரங்கள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்23 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!