இந்தியா

இந்த விஷயத்தை இனிமே 21 வயசுக்குப் பிறகு தான் செய்ய முடியும்!

Published

on

நாடு முழுவதும் சிகரெட் மற்றும் புகையிலை உபயோகிப்பதற்கான  வயது வரம்பை 18லிருந்து 21ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

முன்னதாக சிகரெட் மற்றும் புகையிலை பயன்படுத்துவோர் வயது வரம்பு 18 ஆக இருந்தது. எனினும் அதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல விழுப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்தபோதிலும் அதற்கு எதுவான முன்னேற்றம் ஏற்படவில்லை. இதை அடுத்து சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் சட்டம் 2003ல் மத்திய அரசு மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த மாற்றத்தின்படி 21 வயதிற்கு கீழ்உள்ளவர்கள் 

சிகரெட் மற்றும் புகையிலை பொருள்களை வாங்கவோ விற்கவோ கூடாது. மேலும் பள்ளிகளில் இருந்து 100 மீட்டர் தொலைவில் புகையிலை பொருட்கள் விற்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் புகையிலை பொருட்களை பாக்கெட்களில் அடைத்து விற்க வேண்டும் எனவும் மீறினால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மீண்டும் அதேதவறை செய்தால் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஐந்து லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று ஆணை வெளியிட்டு உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version