ஆரோக்கியம்

ஆரோக்கியம் நிறைந்த மீன் வகைகள் மற்றும் அதன் நன்மைகள்.. லிஸ்ட் இதோ!

Published

on

ஒருவர் சாப்பிடும் உணவில் மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய உணவு மீன். இதில் வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி12 போன்று ஏராளமான நியூட்ரியன்ட்கள் நிறைந்துள்ளன. இவை இரண்டும் பெரும்பாலான இந்தியர்களுக்கு மிக குறைவாக இருக்கிறது.

இதுதவிர மீன்களில் நல்ல கொழுப்பு மற்றும் அதிக புரோடீன் நிறைந்துள்ளது. மீன்களை சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும். மேலும் இது உடலின் நோய் எதிர்ப்பு திறன், மூளை வளர்ச்சி மற்றும் அனீமியா உள்ளிட்டவைகளுக்கும் சிறந்தது.

மூன்று பக்கமும் நீர் சூழ்ந்த பகுதியில் இந்தியா அமைந்துள்ளது. இதுதவிர இந்தியாவில் அதிக ஆறுகள், ஏரி மற்றும் குளங்கள் நிறைந்துள்ளன. இதன் காரணமாக ஆண்டு முழுக்க எல்லா சமயங்களிலும் மீன் சாதாரணமாக கிடைக்கும் உணவாக இருக்கிறது.

எனினும், எந்த மீனை சாப்பிட வேண்டும் என உங்களுக்கு தெரியுமா? இந்தியாவில் கிடைக்கும் மீன்களில் அதிக சத்துக்கள் நிறைந்த மீன் வகைகளை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

ரோகு (Rohu- Carpo Fish)

இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் இந்த மீன் அதிகம் கிடைக்கும். இதில் ஏராளமான புரோடீன் மற்றும் ஒமேகா 3 ரக கொழுப்பு, வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. அனைத்து இந்தியர்களும் வாங்க கூடிய விலையில் இந்த மீன் கிடைக்கிறது. இதில் மெர்குரி அளவு குறைவாக உள்ளதால் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாம்.

கட்லா (Catla- Bengal Carp)

இது சுத்தமான நீரில் கிடைக்கும் மீன் எனலாம். முழுமையான வளர்ந்த நிலையில், இந்த மீன் அதிகபட்சம் 2 கிலோ வரை எடை கொண்டிருக்கும். இது அதிக எண்ணெய் நிறைந்த மீன் ஆகும். இதில் அதிகளவு சல்பர் மற்றும் சின்க் நிறைந்துள்ளது. இது சரும ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு நல்லது.

Also Read: அதிகமா டீ குடிப்பவரா நீங்கள்? நல்லா டீ செய்ய தெரியுமா? இந்த சர்வேயை பாருங்க !

திரை வாளை (Indian Salmon)

இந்த மீன் இந்தியாவின் சால்மன் என்றும் கூறப்படுகிறது. இது நாட்டின் மேற்கு கடற்கரை பகுதியில் அதிகம் கிடைக்கும். இது விலை உயர்ந்த மீன் என்பதோடு, இதன் சுவையும் தூக்கலாக இருக்கும். இந்த மீனில் அதிகப்படியான அமினோ ஆசிட் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளது.

அயல (Bangada – Horse Mackeral)

தென் பகுதி மற்றும் மத்திய இந்தியாவில் அதிகம் கிடைக்கும் மீன் இது. இதில் ஏராளமான ஒமேகா 3, வைட்டமின் டி மற்றும் செலனியம் நிறைந்துள்ளது. இது இதய ஆரோக்கியம், மூளை வளர்ச்சி, இரத்த அழுத்தம் என பல்வேறு பாதிப்புகளை சரி செய்யும்.

சங்கரா (Pink Perch)

இந்த மீனில் ஏராளமான புரோடீன் மற்றும் மிக குறைந்த அளவு மெர்குரி உள்ளது. இது அதிகளவு புரோடீன் தேவைப்படும் விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த மீன் ஆகும். மேலும் இது உடல் எடை குறைப்பு மற்றும் தசைகளை வலுவாக்க சிறந்தது. இந்த மீனும் அனைவரும் வாங்க கூடிய விலையில் கிடைக்கிறது.

வஞ்சிரம் (King Mackerel)

ஏராளமான புரோடீன், ஒமேகா 3, வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி12 நிறைந்த மீன் இது. இது இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்வது, பார்வை குறைபாட்டை மேம்படுத்துவது, எலும்புகளை வலுவாக்குவது என பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.  எனினும் இதில் மெர்குரி அளவு அதிகம் இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் இந்த மீனை தவிர்ப்பது நல்லது.

வவ்வால் (Pomfret)

இது நாடு முழுக்க பிரபலமான மீன் ஆகும். இதில் குறைந்த அளவு எண்ணெய் உள்ளது. அதிக சுவை மட்டுமின்றி ஏராளமான அளவில் ஒமேகா 2 ஆசிட், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் டி நிறைந்து இருக்கிறது.

மத்தி (Sardines)

அதிகப்படியான டிஹெச்ஏ நிறைந்த மீன் இது. இது குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் ஞாபக சக்தியை தூண்டும். மேலும் மூளை வளர்ச்சிக்கும் இந்த மீன் சிறந்தது. இதில் ஏராளமான புரோடீன், வைட்டமின் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதோடு மன அழுத்தத்தை போக்குகிறது.

கெளுத்தி (Cat Fish)

குறைந்த அளவு கலோரி அதிக புரோடீன் நிறைந்த மீன் இது. தவிர ஏராளமான நியூட்ரியன்ட்கள், வைட்டமின் பி12, செலினியம், ஒமேகா 3, ஒமேகா 6 பேட்டி ஆசிட் நிறைந்துள்ளது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த மீன் சாப்பிடலாம். இது மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இதய கோளாறு ஏர்படுவதை தடுக்கும் திறன் கொண்டுள்ளது. எனினும் இதில் மெர்குரி அளவு அதிகம் இருப்பதால் கருவுற்றவர்கள் இந்த மீன் சாப்பிட கூடாது.

seithichurul

Trending

Exit mobile version