பிற விளையாட்டுகள்

ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டி: தமிழக வீராங்கனை பவானிதேவி அபாரம்!

Published

on

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கும் போது இந்தியாவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று சென்றுள்ளனர் என்பதும் அவர்களில் தமிழகத்தை சேர்ந்த சிலரும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்றவர்களில் ஒருவர் சென்னையை சேர்ந்த பவானிதேவி என்பது குறிப்பிடத்தக்கது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு வாள்வீச்சு என்ற போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி வெற்றி பெற்று உள்ளார். முதல் போட்டியில் 15-3 என்ற புள்ளிகள் கணக்கில் துனிசியா நாட்டு வீராங்கனையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். அடுத்த போட்டி இன்று காலை 7.40 மணிக்கு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

முதல் சுற்றிலேயே அபார வெற்றி பெற்ற தமிழக வீராங்கனை பவானி தேவிக்கு வாழ்த்துக்கள் குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பவானிதேவி ஏற்கனவே சர்வதேச வாள்வீச்சு போட்டியான சாட்டிலைட் உலக கோப்பை வாள்வீச்சு போட்டியில் தங்கம் வென்றுள்ளார் என்பதும், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போதைய ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தின் பவானி பதக்கம் வெல்வாரா? இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்ப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version