உலகம்

ஆப்கனில் இந்திய தூதரகம் மூடப்பட்டது: நாடு திரும்புகின்றனர் தூதரக அதிகாரிகள்!

Published

on

ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக அரசியல் குழப்பநிலை இருந்து வரும் நிலையில் இந்திய தூதரகம் மூடப்பட்டதாகவும் அங்கிருந்த இந்திய தூதரக அதிகாரிகள் நாடு திரும்பியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில மாதங்களாக தாலிபான் அமைப்புக்கும் ஆப்கன் அரசுக்கும் இடையே போர் மூண்டது. இந்த போரில் தாலிபான் படைகள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி நேற்று முன்தினம் தலைநகர் காபூலில் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அதிபர் அஸ்ரப் கானி தலைமறைவானார்.

இந்த நிலையில் தாலிபான் அமைப்பின் அரசு விரைவில் ஆப்கானிஸ்தானில் பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் அட்டகாசம் காரணமாக ஏராளமானோர் நாட்டை விட்டு வெளியேறி வெளியேறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமெரிக்கா உள்பட பல நாட்டின் தூதரகங்கள் ஆப்கானிஸ்தானில் மூடப்படுவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் உள்ள இந்திய தூதரகமும் மூடப்படுவதாக மத்திய அரசு அதிகார அபூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய தூதர் மற்றும் அதிகாரிகள் அனைவரும் நாடு திரும்பியதாகவும் காபூலில் இருந்து 120 இந்தியர்களுடன் சற்றுமுன் டெல்லிக்கு இந்திய விமானப்படை விமானம் புறப்பட்ட தாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் அரசை இந்தியா உள்பட மற்ற நாடுகள் ஏற்றுக் கொள்ளுமா என்பதும் மற்ற நாடுகளிலிருந்து அந்நாட்டிற்கு உதவிகள் கிடைக்குமா என்பதும் பெரும் கேள்விக்குறியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version