இந்தியா

அவசரப்பட்டு அமீரகம் வந்து சிக்கிக்கொள்ளாதீங்க.. இந்தியர்களுக்கு தூதரகம் வழங்கிய அறிவுரை!

Published

on

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகம் வழியாக சவூதி அரேபியா செல்ல முயற்சி செய்து இந்தியர்கள் யாரும் துபாய் மற்றும் அபுதாபியில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என இந்தியர்களுக்கு அபுதாபியில் இருக்கும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

சவூதி, மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகளில் பணிபுரிந்து கொரோனா காலகட்டத்தில் இந்தியாவில் சிக்கிக்கொண்ட இந்தியர்கள் பலரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாக சவூதி அரேபியா மற்றும் குவைத் நாடுகளுக்குள் செல்ல முயற்சி செய்து வந்தனர்.

இதற்கிடையே துபாய் மற்றும் அபுதாபியில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் கடந்த ஒரு மாதமாகவே அதிகரிக்க தொடங்கியுள்ளது. மற்ற நாடுகளை போல இங்கு கட்டுப்பாடுகள் கிடையாது. மேலும் அணைத்து சுற்றுலா பயணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வந்து அங்கு வைத்து ஒரு முறை சோதனை செய்துகொண்டால் போதும் முடிவுகள் வந்தபின் அவர்கள் வெளியே செல்லலாம். பெரியளவில் தனிமைப்படுத்துதலுக்கான கட்டுப்பாடுகளையும் பின்பற்றவில்லை.

இதன் காரணமாக அங்கு மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் சவூதி மற்றும் குவைத் போன்ற நாடுகள் தடை விதித்துள்ளன. அமீரகம் வழியாக அந்நாடுகளுக்கு செல்லலாம் என்று திட்டமிட்ட இந்தியர்கள் இப்போது அங்கேயே சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் இந்த நேரத்தில் இந்தியர்கள் அமீரகம் வந்து சிக்கிக்கொள்ள வேண்டாம் என அபுதாபியில் இருக்கும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக இந்திய தூதரகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சவூதி அரேபியா மற்றும் குவைத் செல்ல விரும்பும் இந்திய பிரதிநிதிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிக்கியுள்ள தகவல் அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் துபாயின் இந்திய துணைத் தூதரகம் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பான கட்டுப்பாடுகள் காரணமாக, இங்கு வரும் இந்தியர்கள் துபாய் மற்றும் அபுதாபி வழியாக சவுதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு செல்ல முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: மது தவிர்த்து தயிர் குடியுங்கள்… சொன்ன அதிபருக்கு எதிராக வெடித்த போராட்டம்..!

எனவே அணைத்து இந்திய பிரதிநிதிகளும், இந்தியாவில் இருந்து வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் முன்பு அவர்கள் இறுதியாக சென்று சேரக்கூடிய நாட்டின் சமீபத்திய கொரோனா தொடர்பான பயண வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளை தயவு செய்து அறிந்துகொண்டு புறப்படுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான தனிப்பட்ட ஏற்பாடுகள் மற்றும் நிதிகளை எடுத்துச் செல்லவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சவூதி அரேபியா மற்றும் குவைத் செல்வதற்காக ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்புவது குறித்து பரிசீலிக்க கேட்டுக்கொள்ள படுகிறார்கள். நீங்கள் செல்ல விரும்பும் நாடுகளில் உள்ள பயண கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னரே மீண்டும் பயண திட்டத்தை உருவாக்கிக்கொள்ளவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கொரோனா பாதிப்பால் இதுவரை 947 பேர் உயிரிழந்துள்ளனர். 33 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version