விளையாட்டு

என் வாழ்வின் பெரும் பரிசு… மகளின் பெயரை அறிவித்த கிரிக்கெட் வீரர் நடராஜன்!

Published

on

இந்தியக் கிரிக்கெட் வீரர் நடராஜன் முதன்முறையாகத் தன் மனைவி, மகள் உடன் எடுத்தப் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

இந்திய அணிக்காக ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் வீரர் நடராஜன் விளையாடிக் கொண்டிருந்த சமயம் அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தையப் பார்க்கமுடியாமல் தொர்ந்து இந்திய அணிக்காக விளையாடினார். ஆஸ்திரேலியா தொடரை நிறைவு செய்து சொந்த ஊரான சேலத்துக்குத் திரும்பிய நடராஜனுக்கு ஊர் மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

தற்போது குடும்பம், குழந்தை உடன் தனது ஓய்வு நேரத்தை செலவழித்து வருகிறார் நடராஜன். அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிரான டி 20 போட்டிகளில் பங்குபெற நடராஜன் தேர்வாகி உள்ளார். இந்த சமயம் தனது ட்விட்டர் பக்கத்தில் மனைவி மற்றும் 4 மாத குழந்தை உடன் புகைப்படத்தைப் பகிர்ந்ந்துள்ளார். தனது மகளுக்கு ஹன்விகா எனப் பெயர் வைத்துள்ளதாகவும் நடராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் நடராஜன், “எனது குட்டி தேவதை ஹன்விகா. எங்கள் வாழ்க்கையின் அழகான பரிசு நீ. எங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணமே நீதான். எங்களை உன் பெற்றோர் ஆகத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி லட்டு. என்றும் என்றென்றும் நாங்கள் உன்னை நேசிக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Trending

Exit mobile version