கிரிக்கெட்

சென்னை டெஸ்ட் குறித்து வருத்தம் தெரிவித்த நடராஜன்!

Published

on

பிப்ரவரி 5ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடுவதற்காக இரு அணி வீரர்களும் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் இடம் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த யார்க்கர் புகழ் நடராஜன் சென்னை டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்காதது தனக்கு வருத்தத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்

இந்திய அணியுடன் சென்னை டெஸ்டில் விளையாடாமல் இருப்பதற்கு மனம் கஷ்டமாக இருக்கிறது என்றும், கடந்த சில மாதங்களாக அணியுடன் இருந்துவிட்டு தற்போது அணியில் இருந்து விலகி இருப்பது கடினமானதாக உள்ளது என்றும் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் ஆறு மாதங்கள் நான் குடும்பத்துடன் இல்லாததால் இந்த ஓய்வு எனக்கு அவசியம் தேவைப்படுகிறது என்பதை நான் புரிந்து கொண்டேன் என்று கூறியுள்ளார்.

சொந்த மண்ணான சென்னையில் நடைபெறும் போட்டியில் இந்திய அணியில் இடம் பெறாதது நிச்சயம் வருத்தம்தான் என்றாலும் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்

மேலும் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று வடிவங்களிலும் நான் விளையாட விரும்புகிறேன் என்றும், அதற்காக என்னை நான் தயார் செய்து கொள்கிறேன் என்றும், எனக்கு எந்த அழுத்தமும் கிடையாது என்றும், பயிற்சியாளர் பாரத் அருண் அவர்கள் எனக்கு சிறப்பான பயிற்சியை கொடுத்துக் கொண்டு இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 5ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது என்பதும் இந்த போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் சென்னையில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்கள் 50% அனுமதிக்கப்படும் என தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

seithichurul

Trending

Exit mobile version