கிரிக்கெட்

தொடர் தோல்வி.. இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரை நீக்கமா?

Published

on

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணிக்கு இது மோசமான காலமாகும். கிரிக்கெட் தொடர் விளையாட இங்கிலாந்து சென்று இருக்கும் இந்திய அணி மோசமாக சொதப்பி தோல்வி அடைந்துள்ளது.

5ல் நான்கு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்துவிட்டது. அதிலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா மிக மோசமாக தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. ரவி சாஸ்திரிக்கு பதிலாக ராகுல் டிராவிட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதுகுறித்து இந்த வாரம் நடக்க உள்ள பிசிசிஐ கூட்டத்தில் முடிவு செய்யப்பட வாய்ப்புள்ளது.

Trending

Exit mobile version