கிரிக்கெட்

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்டதாக தகவல்!

Published

on

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து நாட்டில் டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து ரவி சாஸ்திரி தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பந்துவீச்சு பயிற்சியாளர் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் மற்றும் பிசியோதெரபி நிதின் படேல் ஆகியோர்களும் பாதுகாப்பு காரணங்களுக்காக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் இந்திய அணியின் வீரர்கள் அனைவருக்கும் இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்யப்படுவார்கள் என்றும் இரண்டு முறையிலும் நெகட்டிவ் ரிசல்ட் வந்தால் மட்டுமே விளையாடுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அனைத்து வீரர்களுக்கும் வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும் இன்னும் ஒரு சில நிமிடங்களில் பரிசோதனை முடிவு வெளிவரும் என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் நிதானமாக விளையாடி 3 விக்கெட்டுகளை இழந்து 270 ரன்கள் அடித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரோகித் சர்மா சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version