வேலைவாய்ப்பு

இந்திய ஆலோசனை நிறுவனத்தில் வேலை

Published

on

 

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய ஒளிபரப்பு பொறியியல் ஆலோசனை நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 26 இடங்கள் காலியாக உள்ளது.

பணியிடங்கள்: கன்னடம், மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தலா 6 பணியிடங்கள் மற்றும் ஆங்கிலத்தில் 2 பணியிடங்கள் என மொத்தம் 26 காலிப் பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.

அனுமதிக்கப்பட்ட தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகும் பல்வேறு மொழி நிகழ்ச்சிகளில், எந்தெந்த நிகழ்ச்சிகள் கேபிள் தொலைக்காட்சி ஒழுங்குமுறை சட்டம் 1995-க்கு எதிராகவும், நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பர வழிகாட்டுதல்களைப் பின்பற்றப்படாமலும் ஒளிபரப்பப்படுகின்றன என்பதைக் கண்காணித்துத் தெரிவிப்பது மற்றும் இந்திய அரசால் தரப்படும் ஒளிபரப்புக் கண்காணிப்பு தொடர்பான வேறு பணிகளையும் மேற்கொள்வதுமே இந்தப் பணியின் இயல்பு.

கல்வித்தகுதி: இளநிலை பட்டப் படிப்பு முடித்து, கணினி புலமையும், மொழிப் புலமையும் பெற்றிருப்பதோடு, குறைந்தபட்சம் ஓராண்டு ஊடகத் துறை பணி அனுபவமும் பெற்றிருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதழியல் துறையில் முதுநிலை பட்டயப் படிப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

நேர்முகத் தேர்வு முறை: திறனறித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு முறையில் இந்தப் பணியாளர் தேர்வு நடைபெறும்.

 மாத சம்பளம்:  பணியமர்த்தப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 28,635

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள www.becil.com என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

seithichurul

Trending

Exit mobile version