பர்சனல் ஃபினான்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்குத் தொடர்ந்து அதிக டிவிடண்ட் வழங்கும் இந்திய நிறுவனங்கள்!

Published

on

ஒரு நிறுவனத்தின் பங்குகளில் நாம் முதலீடு செய்யும் போது அந்த நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிப்பு மட்டுமல்லாமல், அந்த நிறுவனத்தின் லாபத்திலும் பங்கு வழங்குவதையே டிவிடண்ட் என அழைக்கின்றனர். இப்படி டிவிடண்ட் வழங்கும் பங்குகளில் நாம் முதலீடு செய்யும் போது உங்களது முதலீட்டின் மதிப்பு அதிகரிப்பது மட்டுமல்லாமல், அதன் மூலமாகக் கூடுதல் வருமானமும் கிடைக்கும். எனவே பங்குச்சந்தையில் நீண்ட கால முதலீடு செய்பவர்கள் அதிக டிவிடண்ட் வழங்கும் பங்குகளைத் தேடி முதலீடு செய்வார்கள். அப்படி பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்குத் தொடர்ந்து அதிக டிவிடண்ட் வழங்கும் இந்திய நிறுவனங்கள் பட்டியலை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

பாரத் பெட்ரோலியம்

பாரத் பெட்ரோலியம்

எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான பாரத் பெட்ரோலியத்தின் சந்தை மூலதன மதிப்பு 1,00,642.48 கோடி ரூபாய். ஒரு பங்கின் விலை 463.95 ரூபாய். டிவிடண்ட் வருவாய் 17.03 சதவிகிதம். ஒருவருட வருமானம் 13.75 சதவிகிதம்.

இந்தியன் ஆயில் நிறுவனம்

இந்தியன் ஆயில் நிறுவனமும் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் தான். இதன் சந்தை மூலதன மதிப்பு 1,00,872.71 கோடி ரூபாய். ஒரு பங்கின் நடப்பு விலை 107.15 ரூபாய். டிவிடண்ட் வருவாய் 11.2 சதவிகிதம். ஒரு வருட வருமானம் 22.44 சதவிகிதம்.

இண்டஸ் டவர்ஸ் லிமிட்டட்

தொலைத்தொடர்பு கட்டுமான நிறுவனமான இண்டஸ் டவர் சந்தை மூலதனம் மதிப்பு 57,792.92 கோடி ரூபாய். ஒரு பங்கின் தற்போதைய விலை 214.45 ரூபாய். டிவிடண்ட் வருவாய் 9.38 சதவிகிதம். ஒரு வருட வருமானம் 7.33 சதவிகிதம்.

இந்துஸ்தான் பெட்ரோலியம்

இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் சந்தை மூலதனம் மதிப்பு 36,548.9 கோடி ரூபாய். நடப்பு பங்கின் விலை 257.65 ரூபாய். டிவிடண்ட் வருமானம் 8.83 சதவிகிதம். ஒரு வருட வருமானம் 22.1 சதவிகிதம்.

கோல் இந்தியா லிமிட்டெட்

சுரங்கம் மற்றும் கனிமங்கள் எடுக்கும் நிறுவனமான கோல் இந்தியாவின் சந்தை மூலதனம் மதிப்பு 87,510.74 கோடி ரூபாய். பங்கின் நடப்பு விலை 142 ரூபாய். டிவிடண்ட் வருமானம் 8.45 சதவிகிதம். ஒரு வருட வருமானம் 4.41 சதவிகிதம்.

SJVN லிமிட்டட்

மின்சார உற்பத்தி நிறுவனமான SJVN சந்தை மூலதனம் மதிப்பு 10,590.8 கோடி ரூபாய். ஒரு பங்கின் தற்போதைய விலை 26.95 ரூபாய். டிவிடண்ட் வருமானம் 8.16 சதவிகிதம். ஒரு வருட லாபம் 17.43 சதவிகிதம்.

பவர் ஃபினான்ஸ் கார்ப்ரேஷன்

மின்சார நிறுவனங்களுக்குக் கடன் வழங்கும் பவர் ஃபினான்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் மதிப்பு 34,888.68 கோடி ரூபாய். ஒரு பங்கின் நடப்பு விலை 132.15 ஊபாய். டிவிடண்ட் வருமான 7.19 சதவிகிதம். ஒரு வருட வருமானம் 41.69 சதவிகிதம்.

ஆயில் இந்தியா

எண்ணெய் வலம் கண்டறியும் நிறுவனமான ஆயில் இந்தியாவின் தற்போதைய சந்தை மூலதனம் மதிப்பு 17,60.38 கோடி ரூபாய். ஒரு பங்கின் தற்போதைய விலை 162.95 ரூபாய். டிவிடண்ட் வருமானம் 6.51 சதவிகிதம். ஒரு வருட வருமானம் 70.29 சதவிகிதம்.

இந்துஸ்தான ஜிங்க் லிமிட்டட்

உலோக நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிட்டட் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மூலதனம் மதிப்பு 1,39,900.31 கோடி ரூபாய். பங்கின் நடப்பு விலை 331.1 ரூபாய். டிவிடண்ட் வருமானம் 6.43 சதவிகிதம். ஒரு வருட லாபம் 43.91 சதவிகிதம்.

Trending

Exit mobile version