இந்தியா

அமெரிக்க வங்கிகள் திவாலானதால் இந்திய வங்கிகளுக்கு பாதிப்பா? ஆர்பிஐ கவர்னர் கூறுவது என்ன?

Published

on

அமெரிக்காவில் இரண்டு வங்கிகளும் சுவிட்சர்லாந்தில் ஒரு வங்கியும் திவால் ஆனதை அடுத்து இந்திய வங்கிகளின் நிலை என்ன என்று வங்கி வாடிக்கையாளர்கள் கவலையில் இருக்கும் நிலையில் இது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னணி வங்கியாக இருந்த சிலிக்கான் வேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கி ஆகிய இரண்டு வங்கிகள் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டதால் அந்நாட்டின் பங்குச்சந்தை சரிந்தது. அதேபோல் சுவிட்சர்லாந்து நாட்டின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான கிரெடிட் சூயிஸ் வங்கியும் திவாலானது.

இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்த தாஸ் அவர்கள் இது குறித்து கூறிய போது ’அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி திவால் ஆனதை அடுத்து வங்கிகள் தங்கள் சொத்து மற்றும் பொறுப்பு நிர்வாகத்தில் விவேகம் மற்றும் கவனத்துடன் இருக்க வேண்டிய அவசியத்தை நிலை நிறுத்தி உள்ளதாக தெரிவித்தார். வங்கிகள் நிலையான முறையில் டெபாசிட்டை வளர்க்க வேண்டிய அவசியத்தை இந்த நிகழ்வுகள் காட்டுகின்றது என்றும் வங்கிகளுக்கு இந்த ஆபத்தை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

அமெரிக்க வங்கி அமைப்பில் தற்போது முன்னேற்றம் மற்றும் வங்கித்துறை கட்டுப்பாட்டு மேற்பார்வை முக்கியத்துவத்தை முன்னுக்கு கொண்டு வந்துள்ளன என்று கூறிய அவர், ஒவ்வொரு நாட்டிலும் மிக ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதில் குறிப்பிட்ட தக்க தாக்கத்தை இந்த திவால் வங்கிகளின் செய்திகள் ஏற்படுத்தியுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

மேலும் உலக பொருளாதாரம் வீழ்ச்சியில் உள்ளது என்றும் உலகம் முழுவதும் ஆபத்து சூழ்ந்துள்ளது என்று கூறிய அவர் பண வீக்கத்தின் வேகம் விரும்பத்தக்கதை விட குறைவாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். கொச்சியில் உள்ள பெடல் வங்கியின் தலைமையகத்தில் இவ்வாறு சக்தி காந்தா பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்த தாஸ் மேலும் கூறியபோது இந்திய நிதி அமைப்பு நிலையாக இருப்பதாகவும் நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் மேற்பார்வை இடப்பட்ட வகையில் வங்கித் துறை இருப்பதாகவும் தெரிவித்தார். NBFC மற்றும் மத்திய வங்கியின் டொமைனின் கீழ் உள்ள பிற நிதி நிறுவனங்களால் ஆதரிக்கப்படுவதால் இந்திய வங்கிகளுக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை என்று அவர் கூறினார்.

இருப்பினும் நாங்கள் இப்போது வங்கிகளின் வணிக மாதிரிகள் குறித்து ஆழமாக ஆய்வு செய்து வருகிறோம் என்றும் இது வங்கிகளுக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் வணிக நடவடிக்கைகளில் நாங்கள் தலையிட வேண்டிய நிலை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். நாங்கள் பகுப்பாய்வு செய்து வங்கிகளுக்கு சில ஆலோசனை வழங்கி இருக்கிறோம் என்றும் வங்கிகளில் உள்ள பிரச்சனையை வெளிக்கொண்டு வருவதில் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version