Connect with us

இந்தியா

12 நவீன ரோந்து படகுகள்.. ராணுவத்தின் அதிரடி திட்டம்.. இனி லடாக் எல்லையில் மாஸ் காட்டலாம்!

கிழக்கு லடாக்கில் இந்திய-சீன எல்லை பகுதியில் 6 மதங்களுக்கும் மேலாக பதற்றமான சூழல் நிலவுகிறது.

Published

on

லடாக்: கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் த்சோ ஏரி உட்பட பெரிய நீர்நிலைகளின் கண்காணிப்பை மேம்படுத்துவதற்காக 12 உயர் செயல்திறன் கொண்ட ரோந்து படகுகளை கொள்முதல் செய்ய இராணுவம் ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது.

கிழக்கு லடாக்கில் இந்திய-சீன எல்லை பகுதியில் 6 மதங்களுக்கும் மேலாக பதற்றமான சூழல் நிலவுகிறது. அவ்வப்போது சீன ராணுவம் அந்த பகுதியில் அத்துமீறலிலும் ஈடுபட்டு வருகிறது. மேலும் பாங்காங் ஏரியின் தென்கரைக்கு அருகே படைகளையும் நிலை நிறுத்தியுள்ளது. பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறும் கூட சீனா அந்த பகுதிகளில் இருந்து படைகளை பின்வாங்க மறுத்து வருகிறது. கடைசியாக நவம்பர் 6 ஆம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே மேஜர் மட்டத்திலான எட்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கடந்த வாரம் ராணுவ ஜெனரல் நரவனே கிழக்கு லடாக்கில் பாங்காங் ஏரியை சுற்றியுள்ள உயரமான பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் இந்தியாவின் ஒட்டுமொத்த இராணுவத் தயார் நிலையையும் மதிப்பாய்வு செய்தார். பூஜ்ஜியம் டிகிரி வெப்பநிலை நிலவக்கூடிய கிழக்கு லடாக்கின் பல்வேறு மலைப்பகுதிகளில் கிட்டத்தட்ட 50,000 துருப்புக்கள் அதிக அளவில் போர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சீனாவும் இதற்கு சம எண்ணிக்கையிலான துருப்புக்களை நிலை நிறுத்தியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சீனா அந்த பகுதிகளில் தங்களிடம் இருக்கும் நவீன படகுகள், டிரோன் விமானங்கள் மூலம் கண்காணிப்பை தீவிரமாக செய்து வருகிறது. அதற்கு நிகராக இந்திய ராணுவத்திலும் நவீன படகுகளை கொண்டு பாங்காங் த்சோ உள்ளிட்ட பெரிய நீர்நிலைகளில் கண்காணிப்பை பலப்படுத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி இதற்காக 12 உயர் செயல்திறன் கொண்ட ரோந்து படகுகளை கொள்முதல் செய்ய இந்திய இராணுவம் ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது.

இது தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவா மாநில அரசு நடத்தும் கோவா ஷிப்யார்ட் லிமிடெட் என்கிற பொதுத்துறை நிறுவனத்திடம் 12 விரைவான ரோந்து படகுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அதிக உயரமான பகுதிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் பகுதிகளில் கண்காணிப்பை மேம்படுத்தவும் மற்றும் ரோந்து செல்வதற்காகவும் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு மே மாதம் முதல் இந்த படகுகளை டெலிவரி செய்யும் பணி தொடங்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவுக்கு நிகராக பங்கோங் ஏரி மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள பிற நீர்நிலைகளை கண்காணிப்பதற்காக இந்த படகுகள் வாங்கப்படுகின்றன என்று ராணுவ வட்டாரங்கள் கூறியுள்ளன. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கோவா ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனம், உயர் செயல்திறன் கொண்ட சிறப்பு ரோந்து உபகரணங்களை வழங்குவதற்காக இந்திய ராணுவத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது என்றும், ராணுவத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய சிறப்பு உபகரணங்கள் அதில் பொருத்தப்படும் என்றும் கூறியுள்ளனர். அதற்கான உபகரணங்கள் அனைத்தும் கோவாவில் இருக்கும் அந்த நிறுவனத்தின் உற்பத்தி மையத்திலேயே தயாரிக்கப்படும் என்றும், உலகிலேயே கோவா மற்றும் சில பகுதிகளில் மட்டுமே இதுபோன்ற உபகரணங்களை தயாரிக்கும் இடம் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தவிக்கும் இந்திய மாலுமிகள் :

இதற்கிடையே சீன கடலில் இரண்டு கப்பல்களில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகள் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகத்தின் கப்பல் இயக்குநர் ஜெனரலுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக கடந்தாண்டு பல நாட்கள் சீனா பிற நாட்டினர் தங்கள் நாடுகளுக்குள் நுழைவதற்கு தடை விதித்திருந்தது. அந்த சமயங்களில் அங்கு சென்ற இந்திய சரக்கு கப்பல்களும் சீன துறைமுகங்களுக்கு அருகேயே நிறுத்தப்பட்டிருந்தன. ஆனால் இந்திய கப்பல்களுக்கு மட்டுமே இந்த தடை தொடருவதாகவும் இந்திய கப்பல்களுக்கு பிறகுசென்ற மற்ற நாட்டு கப்பல்கள் எல்லாம் சரக்குகளை இறக்கி விட்டு சென்றுவிட்டன என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறியுள்ள வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, இந்திய மொத்த சரக்குக் கப்பல் எம்.வி.ஜாக் ஆனந்த் கடந்த ஆண்டு ஜூன் 13ம் தேதி முதல் சீனாவின் ஹெபேய் மாகாணத்தில் உள்ள ஜிங்டாங் துறைமுகத்திற்கு அருகே நங்கூரமிட்டு உள்ளது, அதில் 23 இந்திய மாலுமிகள் சிக்கியுள்ளனர். அதே போல மற்றொரு சரக்கு கப்பலான எம்.வி. அனஸ்தேசியா, 16 இந்தியர்கள் உட்பட அதன் குழுவினருடன் செப்டம்பர் 20ம் தேதி முதல் சீனாவின் காஃபீடியன் துறைமுகத்திற்கு அருகே நங்கூரமிட்டு உள்ளனர் என்றார்.

இந்த இரண்டு கப்பல்களும் தங்கள் சரக்குகளை வெளியேற்றுவதற்காகக் காத்திருப்பதாகவும், நீண்ட கால தாமதத்தின் காரணமாக குழு உறுப்பினர்களுக்கு மன அழுத்தம் அதிகரித்துக்கொண்டு இருப்பதாகவும் கூறினார். பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் சீனாவின் பெய்ஜிங், ஹெபேய் மற்றும் தியான்ஜினில் உள்ள சீன அதிகாரிகளுடன் தொடர்ந்து இதுகுறித்து பேசி வருகின்றனர். இந்த விவகாரத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தீவிரமாக பின்பற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே சீனாவின் இந்த செயலுக்கு பதில் நடவடிக்கையாக இந்திய விமானங்களில் சீனர்கள் பறக்க தடை விதிக்கும் விதமாக மத்திய அரசு அணைத்து விமான நிறுவனங்களையும் கேட்டுக்கொண்டு உள்ளதாக ஒரு தகவல் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்8 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்23 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!