உலகம்

போர் பதற்றத்தால் ஈரான் வான்வெளியைத் தவிர்க்க இந்திய விமானப் போக்குவரத்து துறை முடிவு!

Published

on

ஈரான் – அமெரிக்கா இடையில் எப்போது வேண்டுமானாலும் போர் சூழும் அபாயம் உள்ளதால், ஈரான் வான்வெளியைத் தவிர்க்க இந்திய விமானப் போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

ஈரானை கண்காணிக்க அமெரிக்க அனுப்பிய ஆளில்லா விமானம் சுட்டு தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து இரு நாடுகள் இடையில் எப்போது வேண்டுமானாலும் போர் ஏற்படும் அபாயம் உள்ளது.

மறுபக்கம் டொனால்டு டிரம்ப்-க்கு ஈரான் மீது தற்போதைக்கு போர் தொடுக்கும் எண்ணம் ஏதும் இல்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் வெள்ளிக்கிழமை ஈரான் மற்றும் அதன் எல்லைப் பகுதிகளில் அமெரிக்க விமானங்களைப் பறக்க வேண்டாம் என்று அமெரிக்கா வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து இந்திய அரசும் ஈரான் வான்வெளியில் விமானங்கள் செல்வதைத் தவிர்க்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறநாட்டு விமான நிறுவனங்கள் சில ஏற்கனவே ஈரான் வழித்தடத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து வருகின்றன.

seithichurul

Trending

Exit mobile version