சினிமா செய்திகள்

இந்தியன் 2லாம் இல்ல இது அதுக்கு மேல மாஸ் அப்டேட்!

Published

on

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படம் ஆரம்பிக்கப்பட்டு, ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது. படம் டிராப் செய்யப்பட்டு விட்டதாக பெரும்பாலான தகவல்கள் கசிந்து விட்டன.

இந்நிலையில், கமல்ஹாசன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானை சந்தித்துள்ளார். இருவரும் ரஹ்மான் ஸ்டுடீயோவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வேற லெவல் டிரெண்ட் ஆக்கியுள்ளனர்.

சமீபத்தில் இதே இடத்தில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பிகில் படத்திற்கான வெறித்தனமான பாடலை விஜய் பாடுகிறார் என்ற செய்தி புகைப்படத்துடன் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், தற்போது நடிகர் கமல் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய பிரம்மாண்டமான படத்தில் தான் இந்த கூட்டணி இடம்பெறுகிறது அது என்ன படம் என்றால், தலைவன் இருக்கிறான் என்ற படத்துக்காகத் தான் 19 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கமலுடன் இணைந்துள்ளார் இசைப்புயல்.

தெனாலி படத்திற்கு பிறகு தலைவன் இருக்கிறான் படத்திற்கு இசையமைக்கவுள்ளார் ரஹ்மான்.

seithichurul

Trending

Exit mobile version