சினிமா

நடிகர் கமல் சினிமாவுக்கு முழுக்கு: இந்தியன் 2 தான் கடைசி படம்!

Published

on

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை உருவாக்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அதே நேரத்தில் அவர் சினிமாவிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் சினிமாவுக்கு நிரந்தரமாக முழுக்கு போட்டுவிட்டு முழு நேரமும் அரசியலில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கேரளாவின் எர்ணாகுளத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்ற நடிகர் கமல் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்தியன்-2 படத்தில் தான் தற்போது நடித்து வருவதாகவும். அதுதான் தனது திரை உலக பயணத்தின் கடைசி படமாக இருக்கும் எனவும், இந்தியன் – 2 படத்துக்கு பின்னர் சினிமாவில் இருந்து விடைபெற்று விடுவேன் என தெரிவித்தார்.

நடிகர் கமல் சினிமாவில் இருந்து ஒதுங்கினாலும் தனது திரைப்பட நிறுவனம் தொடர்ந்து செயல்படும் என தெரிவித்துள்ளார். தனது கட்சியை வழி நடத்த நிதி தேவைப்படுவதால் அதற்கு உதவும் வகையில் அவரது நிறுவனம் செயல்படும் எனவும் இந்தியன்-2 படப்பிடிப்பு பணிகள் விரைவில் முடிந்ததும் தனது அரசியல் பணி முழு நேரமாக மாறும் என கமல் தெரிவித்துள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version