சினிமா செய்திகள்

இந்தியன் 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!

Published

on

கமல் – ஷங்கர் கூட்டணியில் 20 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் துவங்கவுள்ளதை அறிவிக்கும் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியன் தாத்தா சேனாபதியின் சிக்னேச்சர் அட்டாக்கான வர்ம கலை அட்டாக் செய்யும் இரு விரல்களை ஃபோக்கஸ் செய்து கமலின் வயதான முகம் ஃபோக்கஸ் அவுட் செய்யப்பட்டுள்ள போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த படத்தில் இருந்து நடிகர் சிம்பு வெளியேறிவிட்டதாகவும், அவருக்கு பதிலாக கமலின் பேரன் கதாபாத்திரத்தில் நடிகர் சித்தார்த் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால், அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுகுறித்து இன்னமும் படக்குழு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version