கிரிக்கெட்

இங்கிலாந்தை தவிடுபொடியாக்கிய இந்தியா: ரோஹித், விராத், புவனேஷ்வர் அபாரம்!

Published

on

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ஐந்தாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே அடித்து ஆடியது. ரோகித் சர்மா அபாரமாக ஆடி 34 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். அதேபோல் கேப்டன் விராட் கோலி கடைசி வரை அவுட் ஆகாமல் 80 ரன்கள் எடுத்தா. சூரியகுமார் யாதவ் 32 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 59 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 224 ரன்கள் குவித்தது.

இதனை அடுத்து 225 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி முதல் ஓவரிலேயே ஜேசன் ராய் விக்கெட்டை இழந்தது. இருப்பினும் ஜோஸ் பட்லர் மற்றும் மலான் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை 130 வரை கொண்டு சென்றனர். இந்த நிலையில் பட்லர், மலான், மோர்கன் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை விழ, இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று மிக அபாரமாக பந்துவீசிய புவனேஷ் குமார் ஆட்ட நாயகனாகவும் விராத் கோலி தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மார்ச் 23ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version