கிரிக்கெட்

ஓவல் டெஸ்ட் போட்டி: இந்தியா அபார வெற்றி

Published

on

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஓவல் மைதானத்தில் கடந்த 2ஆம் தேதி ஆரம்பித்த நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. இதனை அடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு செய்ததை அடுத்து இந்திய அணி முதலில் களமிறங்கியது. முதல் இன்னிங்சில் 191 ரன்கள் எடுத்தது. ஆனால் 2வது இன்னிங்சில் சுதாரித்து 466 ரன்கள் எடுத்து இருந்தனர் என்பதும் ரோகித் சர்மா அபார சதம் அடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முதல் இன்னிங்சில் 290 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து அணியின் 368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கியது. ஆனால் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியினரின் அபாரமான பந்து வீச்சு காரணமாக அந்த அணி 210 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதனை அடுத்து இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் அபாரமாக விளையாடி இந்திய அணியில் ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தற்போது இந்தியா 2-1 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் செப்டம்பர் 10-ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வெற்றிக்கு பின்னர் விராட் கோலி பேட்டி அளித்தபோது ஒரு இந்திய அணி கேப்டனாக நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த பௌலிங் பேர்பார்மன்ஸ் இந்த போட்டியில் தான் பார்த்தோம் என்று தெரிவித்தார். மேலும் வெளியே சத்தம் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறது அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஒரு அணியாக எங்களால் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இருந்ததால் நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்றோம் என்று தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version