கிரிக்கெட்

INDvENG – இரண்டாவது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி; தொடரை 1 – 1 என சமன் செய்தது!

Published

on

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றியடைந்துள்ளது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1 – 1 என சமன் செய்துள்ளது.

இந்தப் போட்டிக்கான டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்து 329 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து, 134 ரன்கள் எடுத்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் 286 ரன்கள் எடுத்தது. இதனால் இங்கிலாந்துக்கு வெற்றி இலக்கு 482 என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 164 ரன்களில் இங்கிலாந்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 317 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது இங்கிலாந்து.

இந்தப் போட்டியைப் பொறுத்தவரை முதல் இன்னிங்ஸில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் ரோகித் சர்மா, 161 ரன்கள் எடுத்தார். அந்தப் இன்னிங்ஸில் சுழற் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இரண்டாவது இன்னிங்ஸில் அஷ்வின் சதமடித்தார். அதேபோல இந்தப் போட்டியில் டெஸ்டில் அறிமுகமான அக்சர் படேல், 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ரோகித் சதமடித்திருந்தாலும், அஷ்வினுக்கே ஆட்ட நாயகன் விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து வரும் இரண்டு போட்டிகள் குஜராத்தின் அகமதாபாத்தில் நடக்கிறது. இந்தப் போட்டிகள் பகலிரவு ஆட்டமாக நடக்கும் என்பதால் இரு அணிகளுக்கும் சவாலானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version