பிற விளையாட்டுகள்

ஒலிம்பிக் ஹாக்கி போட்டி: 4-3 கோல் அடித்து இந்தியா பின்னடைவு

Published

on

கடந்த சில நாட்களாக டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை 3 வெண்கலம் மற்றும் 2 வெள்ளிகள் என மொத்தம் 5 பதக்கங்கள் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய மகளிர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இன்று விளையாடி வருகிறது. இந்தியா மற்றும் பிரிட்டன் அணிகள் இடையே நடைபெற்று வரும் இந்த போட்டி சற்று முன்னர் தொடங்கிய நிலையில் இரு அணி வீராங்கனைகளும் ஆவேசமாக விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆரம்பத்திலேயே பிரிட்டன் அணி ஒரு கோல் போட்ட நிலையில் அடுத்து இன்னொரு கோலும் போட்டதால் 2-0 என்ற முன்னிலையில் பிரிட்டன் அணி முன்னிலையில் இருந்தது.

இதனை அடுத்து இந்திய வீராங்கனைகள் ஆவேசமாக விளையாடி முதலில் ஒரு கோலும் அதற்கு அடுத்து இரண்டாவது கோலும் போட்டனர். இதனையடுத்து இந்தியா மேலும் ஒரு கோல் போட்டதால் 4-3 என்ற கோல் கணக்கில் பின்னடைவு பெற்றுள்ளது.

இந்த போட்டியில் வெல்லும் அணிக்கு வெண்கல பதக்கம் கிடைக்கும் என்பதால் இரு அணி வீராங்கனைகளும் மிகவும் ஆவேசத்துடன் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு சில நிமிடங்களில் இந்த போட்டி முடிவடைய உள்ள நிலையில் இந்திய மகளிர் அணி வெண்கலம் வெல்லுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version