இந்தியா

அத்துமீறினால் திருப்பி அடிக்க தயக்கம் இல்லை.. பிரதமர் மோடி எச்சரிக்கை!

Published

on

இந்திய எல்லையில் சில நாட்களாகச் சீனா அத்துமீறி வரும் நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் நேற்று பலியாகினர். இந்நிலையில் நாட்டு மக்களிடையில் உரையாற்றிய பிரதமர் மோடி இந்தியா எப்போதும் அமைதியையே விரும்புகிறது. ஆனால் அத்துமீறினால் கண்டிப்பாகப் பதிலடி கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்புகள் குறித்துத் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாகப் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இந்த கூட்டம் தொடங்கும் முன்பு கால்வான் பள்ளத்தாக்கில் சீன இராணுவ அத்துமீறலால் பலியான 20 இராணுவ வீரர்களுக்காக இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன் பின் பேசிய பிரதமர் மொடி சீனாவை எச்சரிக்கும் வகையில், “எங்கள் ஜவான்களின் தியாகம் வீணாகாது என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். எங்களை பொறுத்தவரையில் நாட்டின் ஒற்றுமையும் இறையாண்மையும் மிகவும் முக்கியம். ஆனால் அத்துமீறினால் கண்டிப்பாகப் பதிலடி கொடுக்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.

மோடி இப்படி பேசும் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்க் உள்ளிட்டவர்களும் அவருடன் இருந்தனர்.

நேற்று சீனா – இந்தியா எல்லையில் கால்வான் பள்ளத்தாக்கில் இராணுவ வீரர்கள் இடையில் ஏற்பட்ட மோதலில், 20 இந்திய இராணுவ வீரர்கள் பலியாகினர். அதே நேரம் சீன தரப்பில் 43 நபர்கள் இறந்ததாகவும் கூறப்படுகிறது. இதை இந்திய அரசு உறுதி செய்து இருந்தாலும், இதுவரை சீன தரப்பில் அவர்களது இராணுவ வீரார்கள் இறந்தனரா என்று எந்த தகவலும் வெளியாகவில்லை.

கடந்த சில வாரங்களாகவே, இந்திய – சீன எல்லையில் பதற்றமான சூழல் ஏற்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி அனைத்து கட்சி தலைவரிகளிடமும் ஜூன் 19-ம் தேதி மாலை 5 மணிக்கு விவாதிக்க உள்ளார்.

அதன் பின்பு ஜூன் 21-ம் தேதி, யோகா தினத்தன்று மக்களிடம் உரையாற்ற உள்ள மோடி, எல்லை பிரச்னை குறித்து எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவுகள் குறித்துத் தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version