கிரிக்கெட்

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது.. புரிந்த சாதனைகள்..!

Published

on

விஷாகபட்டினத்தில் புதன்கிழமை நடைபெற்ற பரபரப்பான இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டிராவானது.

முதலில் பேட் செய்த இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்களைச் சேர்த்தனர். அதிகபட்சமாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்ட்டன் விராத் கோஹ்லி 157 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

பின்னர் 322 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை நோக்கி விளையாடத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் சிம்ரான் ஹெட்மியர் (94) மற்றும் ஷை ஹோப் (123 ) எடுத்து ஆட்டத்தினைச் சமன் செய்ய உதவினர்.

எனவே இந்தப் போட்டியில் நடைபெற்ற சாதனைகள் என்னென்ன என்று இங்குப் பார்ப்போம்.

கோஹ்லி வேகமாக 10,000 ரன்கள் இழுக்கினை அடைந்த வீரர் என்ற பெயரினை பெற்றுள்ளார். சச்சின் டெண்ட்டுல்கரின் சாதனையினை முறியடித்துள்ளார். கேப்டனாக 150+ ரன்களை இரண்டாம் முறை கடந்துள்ளார். 6 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒரு நாள் ஒட்டியில் 1000+ ரன்களை எடுத்த வீரர் என்ற பெருமையினையும் விராத் கோஹ்லி பெற்றுள்ளார். சச்சின் இந்தச் சாதனையினை 7 ஆண்டுகள் தொடர்ந்து செய்துள்ளார். சவுரவ் கங்குலி மற்றும் குமார் சங்ககார சாதனைகளைச் சமன் செய்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் எதிரான போட்டியில் தொடர்ந்து 3 போட்டிகள் சதத்தினைக் கோஹ்லி பதிவு செய்துள்ளார்.

2018-ம் ஆண்டு 39 விக்கெட்களை எடுத்ததன் மூலம் குல்திப் யாதவ் இந்த ஆண்டில் அதிக விக்கெட்கள்ல் எடுத்த 3-ம் விளையாட்டு வீரர் என்ற பெயரினை பெற்றுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version