கிரிக்கெட்

இந்தியா-தென்னாப்பிரிக்கா தொடரின் புதிய அட்டவணை! முதல் டெஸ்ட் எப்போது?

Published

on

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் டிசம்பர் 17ஆம் தேதி தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் திடீரென இந்த தொடர் ஒத்தி வைக்கப்பட்டதாகவும் புதிய அட்டவணை விரைவில் வெளியாகும் என்றும் பிசிசிஐ தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடும் டெஸ்ட் தொடரின் அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. இந்த அட்டவணையின்படி இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் விளையாடும் முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 19ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது என்பதும் இந்த தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடி முடித்ததும் இந்திய அணி அதன் பின்னர் தென் ஆப்பிரிக்கா செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தென்னாபிரிக்காவில் தற்போது ஒமிக்ரான் வைரஸ் மிக தீவிரமாக பரவி வரும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது என்பதும், இந்திய அணியினர் வெளியே செல்ல அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.

முதல் டெஸ்ட்: டிசம்பர் 26-30

இரண்டாவது டெஸ்ட்: ஜனவரி 03-07

மூன்றாவது டெஸ்ட்: ஜனவரி 11-15

முதல் ஒருநாள் போட்டி: ஜனவரி 19

இரண்டாவது ஒருநாள் போட்டி: ஜனவரி 21

மூன்றாவது ஒருநாள் போட்டி: ஜனவரி 23

Trending

Exit mobile version