கிரிக்கெட்

9 விக்கெட்டுக்களை இழந்தும் போராடி டிரா செய்த நியூசிலாந்து: இந்திய அணிக்கு ஏமாற்றம்!

Published

on

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த 25ஆம் தேதி தொடங்கிய முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. 9 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக்கொண்டிருந்த நியூசிலாந்து அணி போராடி டிரா செய்ததையடுத்து இந்திய அணிக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து முதல் இன்னிங்சில் 345 ரன்கள் எடுத்தது என்பதும் இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 296 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் 2-வது இன்னிங்சில் 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கியது.

ஆனால் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் முடிவுக்கு வந்ததை அடுத்து போட்டி டிரா என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரே ஒரு விக்கெட்டை இந்தியா எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும் என்ற நிலையில் அந்த ஒரு விக்கெட்டை விழாமல் தடுத்து நிறுத்தி நியூசிலாந்து அணி போராடி போராடி டிரா செய்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.

இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவின் ஜடேஜா 4விக்கெட்டுக்களையும், அஸ்வின் 3 விக்கெட்டுக்களையும், அக்சர் பட்டேல், உமேஷ் யாதவ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

 

seithichurul

Trending

Exit mobile version