கிரிக்கெட்

இந்தியாவின் வெற்றியை பறித்த வருணபகவான்: முதல் டெஸ்ட் டிரா!

Published

on

இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே கடந்த 4ஆம் தேதி முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த போட்டியில் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா இருந்தபோது மழை பெய்ததால் கடைசி நாள் ஆட்டம் ஒரு பந்து வீச படாமல் போட்டி டிரா ஆனது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை அடுத்து இந்தியா முதல் இன்னிங்சில் 278 ரன்கள் குவித்தது என்பதும் கேஎல் ராகுல் மிக அபாரமாக விளையாடி 84 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் சுதாரித்து 303 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஜோ ரூட் 109 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி வெற்றி பெற 209 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நான்காவது நாள் இறுதியில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்ததால் இந்தியா ஐந்தாவது நாளில் வெற்றி பெற 157 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.

ஆனால் இங்கிலாந்தில் மழை பெய்ததை அடுத்த ஐந்தாவது நாள் போட்டி ரத்து செய்யப்பட்டது ஐந்தாவது நாளில் ஒரு பந்து கூட விசப்படவில்லை என்பதால் போட்டி டிரா ஆனதாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டது.

இந்தியா மிக எளிதில் வெற்றி பெறும் என்ற நிலையில் இந்தியாவின் வெற்றியை வருணபகவான் பறித்தது இந்திய ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக சதமடித்த ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 183/10

ரூட்: 64
பெயர்ஸ்டோ: 29
சாம் கர்ரன்: 27

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 278/10

கே.எல்.ராகுல்: 84
ஜடேஜா: 56
பும்ரா: 28

இங்கிலாந்து 2வது இன்னிங்ஸ்: 303/10

ரூட்: 109
பெயர்ஸ்டோ: 30
சாம் கர்ரன்: 32

இந்தியா 2வது இன்னிங்ஸ்: 52/1

கே.எல்.ராகுல்: 26 அவுட்
ரோஹித் சர்மா: 12 நாட் அவுட்
புஜாரா: 12 நாட் அவுட்

 

Trending

Exit mobile version