கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இங்கிலாந்தின் ஸ்கோர் என்ன?

Published

on

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் எவ்வளவு ஸ்கோர் எடுத்துள்ளது என்பதை தற்போது பார்ப்போம்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த 12ஆம் தேதி 2வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்றதை அடுத்து பந்துவீச தீர்மானம் செய்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கியது.

இந்திய அணியின் கே.எல்.ராகுல் அபாரமாக விளையாடி சதம் அடித்தார் என்பதும் ரோகித் சர்மா 83 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 364 ரன்கள் எடுத்தது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணி நேற்று தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நிலையில் சிராஜ் வீசிய அற்புதமான பந்துவீச்சு உதாரணமாக அடுத்தடுத்த பந்துகளில் 2 விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் கேப்டன் ரூட் மற்றும் பர்ன்ஸ் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இந்த நிலையில் நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் ரூட் 42 ரன்களும், பெயர்ஸ்டோ 6 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாள் முடிவில் இங்கிலாந்து அணி 245 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்றைய 3வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிகளின் விக்கெட்டுகளை இந்தியா வீழ்த்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஸ்கோர் விபரம்:

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 364/10

கே.எல்.ராகுல்: 129
ரோஹித் சர்மா: 83
விராத் கோஹ்லி:42
ஜடேஜா:40

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 119/3

பர்ன்ஸ்: 49
ஜோ ரூட்: 48*
டாம் சிப்லே: 11
ஜான்னி பெயர்ஸ்டோ: 6*

author avatar
seithichurul

Trending

Exit mobile version