கிரிக்கெட்

இங்கிலாந்தில் கைவிடப்பட்ட 5வது டெஸ்ட் போட்டி எப்போது நடைபெறும்? புதிய தகவல்!

Published

on

இங்கிலாந்து நாட்டில் கடந்த 10ஆம் தேதி நடந்திருக்க வேண்டிய 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொரோனா அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் அந்த போட்டியை மீண்டும் நடத்த இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்த போது அந்நாட்டு அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகளில் மோதியது என்பது குறிப்பிடத்தக்கது. முதலாவது டெஸ்டில் முதலாவது தேசிய டெஸ்ட் போட்டி டிரா ஆன நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

இதனை அடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டி நடைபெற இருந்தது. ஆனால் இந்த டெஸ்ட் போட்டி கொரோனா அச்சம் காரணமாக நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டிரா செய்திருந்தாலோ அல்லது வெற்றி பெற்றிருந்தாலோ, தொடரை வென்று இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் இந்த போட்டியை மீண்டும் நடத்த இருநாட்டு கிரிக்கெட் அணி நிர்வாகிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு கோடை காலத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 2 டி20 போட்டிகளை நடத்த முடிவு செய்து இருப்பதாகவும் அப்போது இந்த டெஸ்ட் போட்டியையும் சேர்த்து நடத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் அடுத்த ஆண்டு இந்திய அணி பங்கேற்க உள்ள போட்டிகள் குறித்த அட்டவணையில் இங்கிலாந்து அணியுடனான 5வது டெஸ்ட் போட்டி குறித்த அறிவிப்பு எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் விரைவில் இந்த போட்டி நடப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் இரு நாட்டு அணி நிர்வாகிகளும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

seithichurul

Trending

Exit mobile version