கிரிக்கெட்

மழையால் போட்டி ரத்தா? இந்திய ரசிகர்கள் சோகம்!

Published

on

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மழையால் ஐந்தாவது நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஆகஸ்ட் 4ஆம் தேதி இங்கிலாந்து நாட்டின் நாட்டிங்காம் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 183 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்சில் 278 ரன்கள் எடுத்ததை அடுத்து இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து கேப்டன் ரூட் மிக அபாரமாக சதம் அடித்ததை அடுத்து அந்த அணி 303 ரன்கள் குவித்தது.

இந்த நிலையில் இந்தியாவுக்கு 209 ரன்கள் இலக்கு என்று நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இந்திய அணி களமிறங்கியது. முதல் இன்னிங்சில் அபாரமாக விளையாடிய கேஎல் ராகுல் 26 ரன்களில் அவுட் ஆகி நிலையில் ரோகித் சர்மா மற்றும் புஜாரா ஆகிய இருவரும் தலா 12 ரன்கள் எடுத்த நிலையில் நான்காம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது

இந்த நிலையில் இன்னும் 157 ரன்கள் எடுத்தால் போதும் என்ற வகையில் இந்தியா கைவசம் 9 விக்கெட்டுகளை வைத்திருந்ததால் எளிதில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் ஆட்டம் தொடங்க முடியாத வகையில் மழை பெய்து வருவதால் ஆட்டம் ரத்து செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இன்றைய ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் இந்தியாவின் வெற்றி மழையால் பாதிக்கப்படும் என்று இந்திய ரசிகர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version