கிரிக்கெட்

#INDvsAUS: 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

Published

on

இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, புள்ளி பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

உலகக்கோப்பை 2019 தொடரின் 14வது போட்டி, இன்று இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர்களான ஷிகார் தவான் மற்றும் ரோகித் ஷர்மா உள்ளிட்டவர்கள் பொறுப்பாக விளையாடி ஆட்டத்தைத் தொடங்கினர்.

ரோகித் ஷர்மா 70 பந்துகளுக்கு 57 ரன்கள் எடுத்து நைல் போட்ட பந்தில் அலெக்ஸ் கேரியிடம்கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து கலத்திற்கு வந்து இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டன் விராத் கோலி, ஷிகார் தவனின் வேகத்திற்கு இல்லாமல் நிதானமாக விளையாடத் தொடங்கினார். பின்னர் 109 பந்துகளுக்கு 117 ரன்கள் எடுத்திருந்த போது ஷிகார் தவன் ஸ்டார்க் வீசிய பந்தில் பாட் கும்மின்ஸிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் சென்றார்.

4வது நபராக கலத்திற்கு வந்த இந்தியாவின் ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா தனது அதிரடியான ஆட்டத்தில் 27 பந்துகளுக்கு 48 ரன்கள் எடுத்திருந்த போது கும்மின்ஸ் வீசிய பந்தில் ஃபின்ச் இடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

விராத் கோலி 77 பந்துகளுக்கு 82 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்டோனிஸ் வீசிய பந்தில் பார் கும்மின்ஸிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

தல தோனி 14 பந்துகளுக்கு 27 ரன் எடுத்திருந்தபோது ஸ்டோனிஸ் வீசிய பந்தில் அவரிடம் கேட்ச் கொடுத்தார். லோகேஷ் ராகுல் 3 பந்துகளுக்கு 11 ரன்கள் சேர்த்திருந்தார். முதல் 50 ஓவர்களுக்கு 342 + 10 எக்ஸ்ட்ராஸ் என இந்திய அணி 352 ரன்கள் சேர்த்து 353 ரன்கள் எடுத்து.

353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இரண்டாம் இன்னிங்ஸை விளையாடத் தொடங்கிய ஆஸ்திரேலிய தொடக்க அணி வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் ஃபிஞ்ச் இருவரும் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர்.

ஆனால் 35 பந்துகளுக்கு 36 ரன் அடித்திருந்தபோது கேந்தர் ஜாதவ், ஹார்திக் பாண்டியா இருவரால் ரன் அவுட் ஆனார் ஆரோன் ஃபிஞ்ச். டேவிட் வார்னர் 84 பந்துகளுக்கு 56 ரன்கள் எடுத்திருந்தபோது சாசல் வீசிய பந்தில் புவவேஷ் குமாரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஸ்டீவன் ஸ்மித் 70 பந்துகளுக்கு 69 ரன் எடுத்திருந்தபோது புவனேஷ் குமார் எல்பிடபள்யூ மூலம் விக்கெட் எடுத்தார். உஸ்மான் காவாஜா 39 பந்துகளுக்கு 42 ரன்களும், கெலன் மேக்ஸ்வெல் 14 பந்துகளுக்கு 28 ரன்களும், மார்க்கஸ் ஸ்டோனிஸ் 2 பந்துகள் விளையாடி டக்கவுட்டும், அலெக்ஸ் கேரி சிறப்பாக விளையாடி 35 பந்துகளுக்கு 55 ரன்களும் எடுத்தனர். அடுத்து விளையாட வந்த அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறி அலெக்ஸ் கேரி மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காமலிருந்தார்.

கடைசியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 10 விக்கெட்களையும் இழந்து 36 ரன் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோற்றுப்போனது.

இந்திய அணிக்காகச் சிறப்பாக விளையாடி 109 பந்துகளில் 117 ரன்கள் எடுத்த ஷிகர் தவான் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

seithichurul

Trending

Exit mobile version