இந்தியா

பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் 20 பேருக்கு புதிய வகை கொரோனா! விமான சேவை தடை ஜன.7 வரை நீட்டிப்பு!!

Published

on

புதிய வகை கொரோனா பரவல் தொடங்கியுள்ள நிலையில், பிரிட்டன் நாட்டுனுடனான விமான சேவை தடையை ஜனவரி 7 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா மற்ற நாடுகளுக்கும் பரவத் தொடங்கி விட்டது. இந்தனால் பிரிட்டனுடனான விமான சேவையை இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் தடை செய்துள்ளன. ஏற்கெனவே பிரிட்டனில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவ்வாறு பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 20 பேருக்கு புதிய வகை கொரோனா உள்ளது. இதனால் சுகாதாரப் பணியாளர்கள், அரசு அதிகாரிகள் முழுவீச்சில் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிரிட்டனுடனான விமான போக்குவரத்து சேவைக்கு விதிக்கப்பட்ட தடையை ஜனவரி 7 ஆம் தேதி வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதே போல் சிங்கப்பூர், பிரான்ஸ், தென்னாப்பிரிக்கா என மற்ற சில நாடுகளும் பிரிட்டனுடனான விமான சேவையை நிறுத்தி வைத்துள்ளன. ஏற்கெனவே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version