செய்திகள்

நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் நாளை தொடக்கம்!

Published

on

நாளை முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கவுள்ளது.  முதல் நாளே 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் கோவாக்ஷின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளுக்கு மருந்து கட்டுப்பாடு அமைப்பிலிருந்து அனுமதி அளிக்கப்பட்டது. முதற்கட்ட ஒத்திகையாக மருத்துவ பணியாளர்கள், சுகாதாரத் துறை அமைப்பினருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. அதன் பின்னர் சீரம் மருந்து நிறுவனத்தால் தடுப்பு மருத்துகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாகத் தொடங்கப்பட்டது.

தடுப்பு மருந்தின் விலை ஜி.எஸ்.டி உட்பட இந்திய ரூபாய் மதிப்பில் 210 ஆக மத்திய அரசால் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந் நிலையில் பிரதமர் மோடி நாளை தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கி வைக்க உள்ளார். நாடு முழுவதும் 3 ஆயிரம் மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

முதலில் ஒவ்வொரு மையத்திலும் 100 பேர் வீதம், கள பணியாளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட முதியோர் என 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்த முதற்கட்ட திட்டம் வெற்றிகரமாக  நிறைவடைந்ததும் தடுப்பூசி போடும் மையங்களின் எண்ணிக்கை 5 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Trending

Exit mobile version