வணிகம்

நிதி பற்றாக்குறையை சமாளிக்க தங்கப் பத்திர திட்டத்தில் வெளிநாட்டவர்களை அனுமதிக்க வாய்ப்பு!

Published

on

மத்திய அரசு நிதி பற்றாக்குறையில் உள்ளதால் தங்கப் பத்திரம் திட்டத்தில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு அனுமதியளிக்க முடிவு செய்துள்ளது.

தங்கப் பத்திரம் திட்டத்தில் இதற்கு முன்பே ஒரு முறை வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது.

அப்போது முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் வெளிநாட்டு கரன்சிகளை பயன்படுத்தி தங்கப் பத்திரம் திட்டத்தில் முதலீடுகளை செய்ய அனுமதிக்க கூடாது.

வெளிநாட்டு கரன்சிகள் மூலம் முதலீட்டை அனுமதித்தால் அதிக பணத்தை இந்தியா திரும்ப அளிக்க நேரிடும் என்று எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 3.3 சதவீதமாக இருக்கும் என்று மத்திய அரசு கணித்துள்ளது.

Trending

Exit mobile version