இந்தியா

கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி ஏவுகணை: இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி!

Published

on

கண்டம் விட்டு கண்டம் தாண்டி அழிக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனையை இந்திய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். இதனை அடுத்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்தியாவிலுள்ள ஒடிசா மாநிலத்தில் அப்துல் கலாம் என்ற தீவில் அக்னி-5 ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் இந்த அக்னி-5 ஏவுகணையை வடிவமைத்து உள்ளது என்பதும் இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை தாங்கி கொண்டு சுமக்கக் கூடிய வல்லமை கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூன்று பிரிவுகளாக உள்ள என்ஜின் இதன் சிறப்பு அம்சம் ஆகும். அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட கிழக்கு எல்லையில் சீனா ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்து வரும் நிலையில் இந்த அக்னி 5 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அக்னி-5 ஏவுகணை அணுகுண்டுகளை 5000 கிலோமீட்டர் வரை சுமந்து சென்று எதிரிகளை துவம்சம் செய்யும் வல்லமை கொண்டது என்று இந்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர், இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அக்னி-5 ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது எனவும், ஆனால் அதேநேரம் அணு ஆயுதங்களை நாங்கள் முதலில் பயன்படுத்த மாட்டோம் என்றும் அந்த கொள்கையில் இந்தியா உறுதியுடன் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணை மூன்றாவது முறை நடத்தப்பட்ட பரிசோதனை வெற்றியை பரிசோதனையில் வெற்றி கிடைத்துள்ளதாகவும் இந்த ஏவுகணை விரைவில் இந்திய ராணுவத்துடன் இணைக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

700 கிலோ மீட்டர் முதல் 3500 கிலோமீட்டர் வரை ஏவுகணைகளை தாங்கிக்கொண்டு பாயும் திறன் கொண்டது இந்த அக்னி-5 ஏவுகணை என்றாலும், 12 ஆயிரம் கிலோ மீட்டர் முதல் 15 ஆயிரம் கிலோமீட்டர் வரை பாய்ந்து தாக்கும் ஏவுகணையை சீனா தன் கண்முன் கைவசம் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version