இந்தியா

புதுவகை கொரோனா வைரஸ்: இந்தியாவின் மகத்தான சாதனை!

Published

on

இங்கிலாந்தில் உருவாகியுள்ள புதுவகை கொரோனா வைரஸ் விஷயத்தில் இந்தியா ஓர் மகத்தான சாதனையைப் புரிந்துள்ளது. இந்தப் புது வகை கொரோனாவை, ‘கல்ச்சர்’ செய்துள்ளது இந்தியா. அதாவது பரிசோதனைக் கூடத்தில், கட்டுப்பாடுகள் கொண்ட சூழலில், அந்த வைரஸை முழுவதுமாக வளர்ப்பது ‘கல்ச்சர்’ ஆகும். இதன் மூலம் அந்த வைரஸ் பற்றி முழுவதுமாக புரிந்து கொண்டதாக அர்த்தம். உலகிலேயே இதை செய்யும் முதல் நாடு இந்தியாவாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இது குறித்த தகவலை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ளது.

இதவரை இந்தியாவில் இங்கிலாந்தில் உருவான அதிக வீரியம் கொண்ட கொரோனாவின் புது வகையால் 29 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸானது, 70 சதவீதம் வேகமாக பரவும் தன்மை கொண்டது. சென்னையிலும் ஒரு சிலருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த காரணத்தால் இங்கிலாந்து இந்தியாவுக்கு இடையிலான விமானப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version