இந்தியா

இந்தியா – இலங்கை இடையே கப்பல் சேவை: விரைவில் தொடக்கம்!

Published

on

இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே போக்குவரத்து வசதியை மேற்கொள்வதற்கு அந்நாட்டு அரசு, கப்பல் சேவைத் திட்டத்தை அறிமுகப்படுத்தி ய
உள்ளது. இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்து நடவடிக்கைகள் துரிதமாக இருக்கும் என அறியப்படுகிறது.

கப்பல் சேவைப் போக்குவரத்து

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையேயான பயணிகள் கப்பல் சேவைப் போக்குவரத்தை ஒட்டி, காங்கேசன் துறை துறைமுகத்தினை விரிவுபடுத்தும் பணியைத் தற்போது தொடங்கி உள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை துறைமுகத்திற்கும் இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான புதுச்சேரிக்கும் இடையே போக்குவரத்து வசதியை மேற்கொள்வதற்கு அந்நாட்டு அரசு, கப்பல் சேவைத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன்படி, இந்த கப்பல் சேவைத் திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதற்கிடையே, ஆயிரம் சதுர மீட்டருக்கு பயணிகள் முனையம் அமைக்கும் பணியில், கடற்படை வீரர்கள் சுமார் 60 பேர் ஈடுபட்டுள்ளனர்.

முதல் படகு சேவை

காரைக்கால் துறைமுகத்தில் இருந்து, இலங்கையின் காங்கேசன் துறை துறைமுகத்திற்கு வருகின்ற ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி முதல் படகு சேவை தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இலங்கையில் இருந்து இந்தியா வருவதற்கும், இந்தியாவில் இருந்து இலங்கை செல்வதற்கும் இந்த படகு சேவை பெரிதும் உதவியாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

seithichurul

Trending

Exit mobile version