இந்தியா

கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்! முதலில் வருபவர்களுக்கு முற்றிலும் இலவசம்?

Published

on

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கோவாக்சின், கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் கோவாக்சின் தடுப்பூசியானது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது ஆகும்.

இந்த நிலையில், நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்க உள்ளன. இதனை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். முதற்கட்டமாக முன்களப்பணியாளர்கள், சுகாதாரப்பணியாளர்களுக்கு இலவசமாக போடப்படுகிறது. அதன்பிறகு 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி போடுவதற்கான பயிற்சிகள் அந்தந்த மாநில சுகாதாரத்துறை மூலமாக பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் இரண்டு டோஸ்கள்  28 நாட்கள் கால இடைவெளியில் போடப்படும். முதல் தடுப்பூசி போட்ட பிறகு ஒவ்வாமை ஏதும் ஏற்பட்டால், இரண்டாம் தடுப்பூசி போடப்படாது.

Trending

Exit mobile version