இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு: முதலிடத்தை தொடுமா?

Published

on

இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தினமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இரண்டு லட்சத்தை நெருங்கி உள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1.84 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் நேற்று மட்டும் 1,84,372 பேர்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாகவும் இந்த கொரோன காரணமாக நேற்று ஒரே நாளில் 1,027 பேர் உயிரிழந்ததாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் உச்சக்கட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இன்று பிரதமர் மோடி அவர்கள் அனைத்து மாநில ஆளுநர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளார். இந்த ஆலோசனைக்கு பின் நாடு முழுவதும் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகள் குறித்த அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் முக்கிய மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த விவரத்தை தற்போது பார்ப்போம்

மகாராஷ்டிரா – 60,212

உத்தரபிரதேசம் – 17,963

சண்டிகர் – 15,121

டெல்லி – 13,468

மத்திய பிரதேசம் – 8,998

கர்நாடகா – 8,778

கேரளா – 7,515

தமிழ்நாடு – 6,984

குஜராத் – 6,690

ராஜஸ்தான் – 5,528

மேற்குவங்காளம் – 4,817

ஆந்திர பிரதேசம் – 4,228

பீகார் – 4,157

ஹரியானா – 3,845

பஞ்சாப் – 2,980

ஜார்கண்ட் – 2,844

உத்தரகாண்ட்- 1,925

ஒடிஷா- 1,784

ஜம்மு காஷ்மீர் – 1,269

Trending

Exit mobile version