கிரிக்கெட்

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி வரலாற்று சாதனை!

Published

on

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணிக்கு இது முக்கியமான ஒரு நாளாக பார்க்கப்படுகிறது.

சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 622 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 300 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபாலோ ஆன் முறையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. ஆனால் மழை காரணமாக ஆட்டம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டது. நேற்றைய நான்காம் நாள் ஆட்டமும் மோசமான வானிலை காரணமாக முன்கூட்டியே நிறுத்தப்பட்டது. இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டம் முழுவதும் மழை காரணமாக நிறுத்தப்பட்டது.

இதனால் இந்தியாவின் வெற்றிவாய்ப்பு பறிப்போனது. ஆட்டம் சமனில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்திய அணி இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. ஆட்ட நாயகம் மற்றும் தொடர் நாயகன் விருது புஜாராவுக்கு வழங்கப்பட்டது. இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றுவது 72 ஆண்டுகளுக்கு பின் இதுவே முதன்முறையாகும்.

இதுவரை 11 முறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி முதன்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முதல் ஆசிய கேப்டன் என்ற பெருமையையும் கோலி பெற்றுளார். இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் புஜாரா, பண்ட், கோலி ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.

Trending

Exit mobile version