இந்தியா

சீன போயிங் விமான விபத்து எதிரொலி.. இந்திய அரசு அதிரடி கட்டுப்பாடு!

Published

on

சீனாவில் திங்கட்கிழமை போயிங் 737 விமானம் 132 பயணிகளுடன் விபத்தில் சிக்கியது.
இதற்கு முன்பும் போயிங் 737 விமானம் பல முறை விபத்தில் சிக்கியுள்ளது. அப்போது எல்லாம் இந்திய விமான போக்குவரத்துத் துறையும் போயிங் விமானம் பறக்கத் தடைகளை விதித்துள்ளது.
இப்போது சீன போயிங் விமான விபத்தைத் தொடர்ந்து, இந்திய விமான நிறுவனங்களுக்குச் சொந்தமான போயிங் 737 விமானங்களைக் கண்காணிக்க இந்திய விமான போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், விஸ்தரா உள்ளிட்ட விமான போக்குவரத்து நிறுவனங்களிடம் போயிங் 737 விமானம் உள்ளது.

இதுவரையில் நடைபெற்ற போயிங் 7370800 விமான விபத்துகள்

செப்டம்பர் 30, 2006: கோல் டிரான்ஸ்போர்ட் ஏரியோஸ் விமானம் 1907

பிரேசிலின் மனாஸ், பிரேசிலியா மற்றும் ரியோ டி ஜெனிரோவிற்கு இடையே நடைபெற்ற போயிங் விமான விபத்தில் 149 பயணிகள் கொல்லப்பட்டனர்.

மே 5, 2007, கென்யா ஏர்வேஸ் விமானம் 507

டூவாலாவில் நடைபெற்ற போயிங் விமான விபத்தில் 114 பயணிகள் பலியாகினர்.

ஜனவரி 25, 2010: எதியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் 409

ரஃபிக் ஹரிரி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 90 பேரும் இறந்தனர்.

மே 22, 2010: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 812

துபாயிலிருந்து மங்களூரு வந்த போயிங் விமானம், விமானியின் தவறால் 160 பயணிகள் மற்றும் 6 ஊழியர்களுடன் விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 158 பேர் இறந்தனர்.

மார்ச் 19, 2016: ஃப்ளை துபாய் விமானம் 981

துபாயில் இருந்து ரஷ்யா சென்ற ஃப்ளை துபாய் விமானம் 981 62 பயணிகளுடன் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.

ஜனவரி 8, 2020: உக்ரைன் ஏர்லைன்ஸ் விமானம் 752

ஈரானிலிருந்த போர் பதற்ற சூழலில், தவறுதலாக உக்ரைன் ஏர்லைன்ஸ் விமானம் 752 மீது சிறிய ரக ஏவுகணை மோதி விபத்தானது. அதிலிருந்து 176 பயணிகளும் இறந்தனர்.

ஆகஸ்ட் 7, 2020: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 1344

கோவிட்-19 காலத்தில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டிலிருந்த இந்தியர்களை அழைத்து வந்த போது கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 19 நபர்கள் இறந்தனர். 165 நபர்கள் உயிர் தப்பினர்.

Trending

Exit mobile version