உலகம்

மூன்.. மார்ஸ்.. அடுத்து கடல்.. கடலுக்கு அடியில் குழாய் போட்டு கனிமங்களை எடுக்கும் இந்தியா!

Published

on

டெல்லி: இந்தியா தற்போது கடலுக்கு அடியில் இருந்து கனிமங்களை எடுக்க திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக இந்திய பெருங்கடலில் பெரிய அளவில் ஆராய்ச்சி செய்ய களமிறங்கி உள்ளது.

இன்னும் சில வாரங்களில் ஹாலிவுட்டின் டிசி நிறுவனத்தில் இருந்து அக்குவா மேன் என்று ஹாலிவுட் திரைப்படம் வெளியாக இருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்டு இருக்கும் இந்த படத்தில் கடலுக்கு அடியில் இருக்கும் ராஜ்ஜியம் பற்றித்தான் கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் இந்தியா உண்மையாக இந்திய பெருங்கடலுக்கு அடியில் இருக்கும் ராஜ்ஜியத்தை வெளியே எடுக்க திட்டமிட்டு உள்ளது.

அதன்படி இந்திய பெருங்கடலில் கடலுக்கு அடியில் உள்ள கனிமங்களை இந்தியா எடுக்க இருக்கிறது. இன்னும் சில வருடங்களில் இதற்கான பணிகளை தொடங்க உள்ளது. இந்திய பெருங்கடலில் 72 சதுர கிலோ மீட்டர் வரை இப்படி கனிமங்களை எடுக்க இந்திய சர்வதேச கடற்படை அதிகார சபையிடம் அனுமதி வாங்கி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version