கிரிக்கெட்

ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட்.. ஒரே குரூப்பில் இந்தியா-பாகிஸ்தான்: ஜெய்ஷா தகவல்

Published

on

இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே அனல் கக்கும் போட்டியாக மாறி வரும் நிலையில் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒரே குரூப்பில் இருப்பதாக ஜெய்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை டி20 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை. அதனால் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணி இறுதிப் போட்டியில் விளையாடியபோது இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற இருக்கும் நிலையில் இதுகுறித்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய்ஷா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஒரே குரூப்பில் இடம் தர இருப்பதாகவும் மற்ற குரூப்பில் இலங்கை வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். இதனையடுத்து மீண்டும் ஒரு இந்தியா-பாகிஸ்தான் போட்டி உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் அரசியல் ரீதியாக எதிரெதிர் கருத்துக்களை கொண்ட நாடுகளாக இருக்கும் நிலையில் அந்த நாடுகளின் கிரிக்கெட் போட்டியும், இந்தியா பாகிஸ்தான் மட்டுமின்றி உலகம் முழுவதும் உற்றுநோக்கும் போட்டியாக மாறி விடும் என்பது குறிபிடத்தக்கது. அந்த வகையில் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் நடத்தும் என்று கூறப்பட்ட நிலையில் பாகிஸ்தானில் போட்டிகள் நடந்தால் இந்தியா கலந்து கொள்ளாது என்று அறிவித்து உள்ளது. எனவே பொதுவான ஒரு நாட்டில் இந்த போட்டிகளை நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் திட்டமிட்டு வருவதாகவும் அனேகமாக இந்த போட்டிக்கு அரபு நாடுகளில் நடத்த அதிக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இதுவரை 6 முறை இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றுள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டிலும் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version